சென்னை, ஏப்.9: வாகன ஓட்டுநர்களின் தேவை அதிகரித்து வருவதால் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பயிற்சியின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்புகளை பெறலாம்.
45 நாட்கள் வாகன(LMV/HTV) ஓட்டுநர் பயிற்சி மற்றும் 30 நாட்கள் போர்க்லிப்ட் ஆபரேட்டர்( Forklift Operator) பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாள் 6 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும். இதற்கான குறைந்த பட்ச கல்வி தகுதி 8, 10, 12 ஆம் வகுப்பு ஆகும். 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது.
போர்க்லிப்ட் ஆபரேட்டர் மற்றும் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற https://finance.tnskill.tn.gov.in/skillwallet/cou என்ற இந்த இணைய தளம் பக்கத்தை பார்க்கவும்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இதர சேவைகளை தெரிந்து கொள்ள www. naanmudhalvan.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
-ஸ்ரீஜா.