பன்னிரண்டாம் வகுப்புக்குப்பிறகு என்ன படிக்கலாம் என்ற கேள்வி வரும்போதே முதலில் வரும் விடை “ மருத்துவம், பொறியியல்….” என்பதாகத்தான் இருக்கும். இப்போது சட்டமும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில் மற்ற துறைகளில் இருக்கும் பிரகாசமான வாய்ப்புகளை இன்னும் நம்மவர்கள் தெரிந்துகொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கும் சேதி.
எடுத்துக்காட்டாக, வணிகவியல் பாடத்தைச் சொல்லலாம். 11 ஆம் வகுப்பில் கலைப்பிரிவை (வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல்) எடுப்பதாகப் பிள்ளைகள் சொன்னாலே பதறும் பெற்றோர் இன்னும் இருக்கின்றனர். அத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்த தெளிவின்மையே இதற்குக்காரணம்.
இந்நிலை தொடரக்கூடாது என்று முனைவு எண்ணுகிறது. எனவே, வணிகவியல் துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில் வாய்ப்புகள் என்று எல்லாவற்றையும் பற்றி முனைவு பேச இருக்கிறது.
பொதுவாக, வணிகவியல் படித்தோருக்கு பி.காம், பிபிஏ, பிசிஎஸ், டேட்டா அனலிசிஸ், புள்ளியியல், பொருளியல் முதலிய பல்வேறு இளநிலைப்படிப்புகள் இருக்கின்றன. முதுநிலைப்படிப்பில் எம்.காம், எம்பிஏ, எம்.ஐ.பி முதலிய படிப்புகள் ஏராளமாக வரிசைகட்டி நிற்கின்றன. ஒவ்வொரு படிப்பு க்குறித்தும் விரிவாக விவாதிக்க இருக்கிறோம்.
முனைவின் யூ டியூப் சானலான https://www.youtube.com/watch?v=q5Xw9XCBrIQ என்ற இணைப்பில் சென்று விரிவான உரையாடலைக் காணலாம். தொடர்ச்சியாக உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த உரையாடல்கள் அதில் இடம்பெறும்.
-தமிழ்.





