ஆஷா: ’ஒரு டப்பர் வேரின் …ஸாரி!… ஒரு டாப்பரின் கதை!’

“நம்முடைய இந்திய இல்லத்தரசிகள்,அதிலும் தென்னிந்தியப் பெண்கள், ரொம்பவே சென்டிமெண்ட் பார்ப்பார்கள்.குறிப்பாக தாய் வீட்டிலிருந்து,திருமணத்துக்காக தாங்கள்  சீதனமாகப் பெற்ற பாத்திரங்களை  விடுவதற்கு இவர்களுக்கு ஒருபோதும் மனம் வராது.

அதனால் இவர்களது கிச்சன் உலகத்துக்குள் டப்பர்வேர் தயாரிப்புகளை கொண்டு போய் சேர்ப்பதை எனக்கு விடப்பட்ட பெரும் சவாலாகக் கருதினேன்.” – புன்னகையோடு பேசுகிறார்  ஆஷா குப்தா.

 

நாற்பத்ashaguptha4தியிரண்டு வயதுப் பெண்ணான இவர்  டப்பர்வேர் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கான குரூப் பிரெசிடன்ட்.இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால்,இவர்,டப்பர்வேர் இந்தியாவின் எம்,டி யாகவும் பணிபுரிந்திருக்கிறார்.

மிக இள வயதிலேயே இப்படி பட்டையைக் கிளப்பி வரும் ஆஷாவின் பிஸினஸ் வியூகங்கள், வியாபாரத்தில் உச்சம் தொட நினைக்கும் பெண்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

 

“சென்னைப்  பல்கலைக்கழகத்தில் பி.காம் படிப்பை முடித்தேன்.பிறகு மும்பையில் முதுகலைப் படிப்பு……டெக்ஸ்டைல் நிறுவனம்  முதல் எனர்ஜி டிரிங் தயாரிப்பு நிறுவனம் வரை நிறைய கம்பெனிகளில்  சேல்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் அனுபவமும் எனக்குக் கிடைத்தது.” என்று தன்னைப் பற்றி சுய விமர்சனம் செய்கிற ஆஷா  அதற்குப் பிறகு டப்பர்வேர் இந்தியா  நிறுவனத்துக்குள்  நுழைந்திருக்கிறார்.

 

”1997-ல் நான் டப்பர்வேர் இந்தியாவின் தென்னிந்திய சேல்ஸ் பிரிவில்  வேலைக்குச் சேர்ந்தேன்.அப்போதெல்லாம்  ஸ்டெயின் லெஸ் ஸ்டீல்-க்கு மாற்றாக பிளாஸ்டிக் மட்டுமே வீடுகளில்  புழக்கத்தில் இருந்தது. டப்பர்வேர் மாதிரியான பொருட்களை தங்கள் வீட்டுக் கிச்சனுக்கு கொண்டுவர பெண்கள்  ரொம்பவே யோசித்தார்கள்.

 

அம்மா கொடுத்தது, மாமியார் வீட்டில் ஏற்கனவே  இருப்பது என்று தேவைக்கு அதிகமாகவே பாத்திரங்கள் இருக்கும்போது,உ
ணவுப் பொருட்களை,பாதுகாக்க,சமைக்க,பரிமாறுவதற்கு என்று  தனியாக டப்பர்வேரை ஏன் வாங்க வேண்டும் என்று கேள்வி கேட்டார்கள்,” என்கிறார் ஆஷா.

“நான் டப்பர்வேரில் வேலைக்குச் சேர்ந்த புதிதில், டப்பர்வேர் பார்ட்டி என்கிற ஒன்றை நடத்தினேன்.எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த பெண்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோரையும் அழைத்து,டப்பர்வேரின் முக்கியத்துவத்தைப் பற்றி அந்தப் பார்ட்டியில் எடுத்துச் சொன்னேன்.

 

இதைக் கேட்ட பிறகு இதில் கலந்து கொண்ட பெண்களில் நிறைய பேர், “உங்க பொண்ணு நல்லா படிச்சிருக்கா.அப்புறம் எதுக்கு அவளுக்கு இந்த பிளாஸ்டிக் விக்கிற வேலை? பேசாம அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்க” என்று என்  அம்மாவுக்கு ஆலோசனை   சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

 

அப்போது முடிவு செய்தேன்.இந்த பிஸினஸில் ஜெயித்துக்காட்ட வேண்டும் என்று. எடுத்த உடனேயே ஒரு பொருளை கண்ணை மூடிக்கொண்டு நம் பெண்கள் வாங்க மாட்டார்கள்.அதனால் பிளாஸ்டிக்கை விட டப்பர்வேர் ஏன் சிறந்தது என்பதையும், காற்றுப் புகாத டப்பர்வேர் கண்டெய்னரில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றியும் பெண்கள் மத்தியில் பொறுமையாக  எடுத்துச் சொல்ல ஆரம்பித்தோம்.

ashaguptha6

ஆனால் உடனடியாக அதற்கு எந்த ஒரு பெரிய  ரெஸ்பான்ஸும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கான பலன்  வேறோருநாள் நமக்குக் கிடைக்கும் என்று நம்பினேன்” என்கிற இவருக்கு இதன் பிறகு   மார்க்கெட்டிங் பிரிவு தலைவராகப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது.

’இட்லி மாவு தோசை மாவில்லாத தென்னிந்திய வீடுகள் இல்லை.எவ்வளவுதான் பிரிட்ஜில் வைத்தாலும் மாவு ஒரு கட்டத்தில்  புளித்துப் போய்விடும்.ஆனால் டப்பர்வேர் மாவை எப்போதும்  பிரெஷ்ஷாக வைக்கும்’ என்கிற கான்செப்டோடு மறுபடியும் பெண்களை சந்தித்தோம். இதற்கு பெண்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

ashaguptha2

அதன் பிறகு இந்திய உணவுப் பழக்கங்களை அடிப்படையாக வைத்து டப்பர்வேர் தயாரிப்பை புதுப்பொலிவுடன் மார்க்கெட்டில் விட்டோம்.

பெண்கள் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக அங்கீகரிக்க ஆரம்பித்தார்கள்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிற ஆஷா பிறகு டப்பர்வேர் இந்தியாவின் எம்.டி யாகவும் பணிபுரிந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் இவர் செயல்படுத்திய  ஒரே ஒரு ஐடியா, டப்பர்வேர் –இந்தியா பிசினஸை, உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

 

“ஆமாம்…..மாடுலர் கிச்சன்கள் எங்கு பார்த்தாலும் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. அதனால் அந்தக் கிச்சனை  அழகு அழகான கண்டெய்னர்களைக் கொண்டு அழகுபடுத்த இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். அதனால்  இவர்களின் தேவையை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம்.

 

அதற்கு  குடும்பத் தலைவிகளையே,டப்பர்வேர் டிஸ்ட்ரிபியூட்டர்களாக எங்கள் பிஸினஸில் இணைத்துக்கொண்டோம். அவர்கள் தங்கள் திறமையால் டப்பர்வேர் பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்ற ஊதியம் அவர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்தது. கூடவே எங்கள் பிஸினஸும் சூடு பிடிக்க ஆரம்பித்தது” என்று பெருமிதம் பொங்கப் பேசும் ஆஷா இப்போது ஆசியா-பசிபிக் பகுதிகளுக்கான குரூப் பிரெசிடென்ட்டாகவும் அசத்திக் கொண்டிருக்கிறார்.

 

பிஸினஸில் நீங்கள் டாப்பராக வர டப்பர்வேர் ஆஷா சொல்லும் யோசனைகள்:

 

*மாற்றத்துக்கு தயாராகுங்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பிஸினஸ் செய்யுங்கள்.

 
*பிஸினஸில் ஜெயிக்க அங்கே இங்கே போய் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்று எந்த விதக் கட்டாயமும்கிடையாது. நுகர்வோரின் தேவைகளைப் புரிந்து பிஸினஸ் செய்தால் போதும். ஜெயித்துவிடலாம்.

 

-கவிதா பாலாஜி.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

4 thoughts on “ஆஷா: ’ஒரு டப்பர் வேரின் …ஸாரி!… ஒரு டாப்பரின் கதை!’”

    1. மிக்க நன்றி கார்த்திகா. தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் முனைவு இதழைப் பகிருங்கள்.

    1. நன்றி ஜனனி. தங்கள் நண்பர்களுக்கும் முனைவு இதழைப் பகிருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *