நிர்வாக நெறிகாட்டும் ஜென் கதைகள்

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வழிமுறைகள்

சிந்திப்பதில், முடிவெடுப்பதில், வித்தியாசத்தைச் செய்தால் நீங்கள் சாதனையாளர் என்கிறார் நிர்வாக வல்லுநர் அல்ஹோன்.

 

அது எப்படி என்கிறீர்களா? அந்த வெற்றியைப் பெற உங்களுக்குத் தேவை பயிற்சி, முயற்சி, மன உறுதி அடக்கம் ஆகிய நான்கும் என்கிறார் நாமறிந்த பில்கேட்ஸ்.

 

எல்லாம் சாதிக்க முடிந்தவையா? என்கிற சந்தேகம் வருகிறதா உங்களுக்கு…அதற்கு மிக எளிமையான வழியைக் காட்டுகிறார்கள் ஜென் துறவிகள்.

உள்ளுக்குள் பிரச்சனையை உணர்தல்

ஜென் குரு ஒருவர் தியானத்ததில் இருந்தார். தூரத்தில் இருந்து ஒருவன்  ஓடிவந்து, குருவை பின்னால் தட்டிவிட்டுச் சென்றான். குருவோ சலனமில்லாமல் இருந்தார். அவன் மீண்டும் மீண்டும் அதையே செய்தான்.

 

பின்னர் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். குருவோ புன்னகை மாறாமல் தியானத்தில் இருந்தார்.

 

monk-555391_1280

அருகில் இருந்த சீடனுக்கு ஆச்சரியம். குரு கண் விழித்ததும் கேட்டான். சிரித்தபடி சொன்னார் குரு. “அவனுக்கு ஏதோ பிரச்சனை. அதை என்னிடம் மாற்றிவிடப் பார்க்கிறான். அவன் அடித்ததற்கு நான் கோபப்பட்டு எதிர்வினையாற்றினால்  அவன் பிரச்சனை எனதாகிப் போய்விடும்.அதனால் என் மன நிலை மாறிவிடும். அதை எனக்கு மாற்றிவிட்ட மகிழ்ச்சி அவனுக்குக் கிடைக்கும். அதற்கு நான் ஏன் இடம் தர வேண்டும்? இப்போது பார் அவனே அசந்து போய் உட்கார்ந்து விட்டான்” என்றார் அமைதியாக.

 

நிர்வாக நீதி

தாக்கும் பிரச்சனைகளை ஏற்றுக் கொள். தடுக்காதே. உந்தும் உணர்ச்சி வேகத்தில் உன்னை இழக்காமல் செயல்பட்டால் பிரச்சனைகள் வலுவிழந்துவிடும். நிரந்தர வெற்றி என்பது நிதானமாக அதை உணரும் பக்குவத்தின் தீர்வில்தான் இருக்கிறது.

-தஞ்சை என்.ஜே.கந்தமாறன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *