2021- ஆம் ஆண்டின் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பு தொடர்பாக சமூக ஊடக நிறுவனமான மெட்டாவுக்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) அண்மையில் ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் சேவையை வழங்குவதற்கு முன்பே பயனர்களிடமிருந்து, வாட்ஸ்அப்பில் சேகரிக்கப்படும் அவர்களின் தரவுகளை மற்ற மெட்டா நிறுவனங்களுடன் பகிர்வதற்கு முன்நிபந்தனை போடுவதை கூடாதென்று சிசிஐ கூடாதென்று மறுத்திருக்கிறது.
முந்தைய தனியுரிமை கொள்கையில், பயனர்கள் தங்கள் தரவை (தனிப்பட்ட தகவல்களை_ முகநூலுடன் பகிர விரும்புகிறீர்களா என்பதை தீர்மானித்து விருப்பம் தெரிவிக்கவும் நிராகரிக்கவும் வசதி இருந்தது. ஆனால் தற்போதைய புதுப்பித்த கொள்கையின்படி பயனர்களின் தரவு பகிர்வைக் கட்டயாமாக்கி இருக்கிறது. நிராகரிப்பு வசதியை நீக்கியிருக்கிறது. இதனால் இந்த தளத்தில் பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டியுள்ளது. மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் மூலமாக வணிகப் போட்டி சட்டத்தின் 4(2)(a)(i)- ஐ மீறி உள்ளதாக சிசிஐ கூறியுள்ளது
மேலும் செல்பேசிகள் மூலம் ஓடிடி செய்தி பகிர்வு பயன்பாட்டிலும் மெட்டா நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் இதுபோன்ற செயற்பாட்டால் மற்ற போட்டியாளர்களுக்கு நுழைவு தடையை உருவாக்கியுள்ளதாகவும் சிசிஐ கூறுகிறது.
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் தகவலும் ஒரு தொழில் வாய்ப்பாகப் பார்க்கப்படும் நுகர்வுச் சூழலில் நாம் எவ்வளவோ சுதாரிக்க வேண்டியிருக்கிறது இல்லையா!
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.