சென்னை, மார்ச் 14: தமிழக அரசு தனது நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார். இது, தி.மு.க அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை என்பதால் அடுத்த ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால் இன்றைய அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
மாற்றுத்திறனாளிகள், தொழில்முனைவோர், தமிழ்வளர்ச்சி தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.