பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்

பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்

சென்னை,ஜன.9: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகரான திரு.பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.  புற்றுநோய் சிகிச்சையில் இருந்த ஜெயச்சந்திரன், நோய் முற்றிய நிலையில் திருச்சூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமாகியிருக்கிறார்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை 1986ல் பெற்ற அவர், கேரள அரசின்  விருதுகளை 5 முறையும் தமிழக அரசின் ‘சிறந்த பின்னணிப்பாடகர்’ விருதை இரண்டு முறையும் பெற்றிருக்கிறார். மலையாளத் திரையுலகுக்கு அவர் செய்த பங்களிப்பைப் போற்றும் வகையில் ஜே.சி.டேனியல் விருது அவருக்க்கு வழங்கப்பட்டது.

16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஜெயச்சந்திரன், கே.ஜே.ஜேசுதாசின் குரலை ஒத்த, அதே வேளையில் அதிலிருந்து சற்று விலகிய மென்மையான குரலைப்பெற்றவர். தமிழர்கள் பலருக்கும் அவரது பாடல்கள் ஜேசுதாஸ் அவர்களின் பாடல்தானோ என்ற ஐயம் வந்த காலம் உண்டு. வைதேகி காத்திருந்தாள்-படத்தில் எல்லா பாடல்களையும் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார்.  அப்பாடல்களுக்காகவே அப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அவருக்கு சாகாப்புகழையும் தந்தது.

அதேபோல ‘கஸ்தூரி மான் குட்டியாம்’ ; ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’; ’கொடியிலே மல்லிகைப்பூ’; ’செம்மீனே செம்மீனே’; ’தாலாட்டுதே வானம்’; ’வண்டி மாடு எட்டு வைச்சு முன்னே போகுதம்மா’; ’என் மேல் விழுந்த மழைத்துளியே’; ’வசந்த கால நதிகளிலே’; ’ஒரு வானவில் போலே..என் வாழ்வினில்…’ முதலிய காவியங்கள் அவர் கைவண்ணம்தான்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கீரவாணி, தேவேந்திரன், வித்யாசாகர் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இயக்கத்தில் சாகாவரம் பெற்ற பாடல்களைத் தந்த பி.ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவில் முனைவு துயரம் கொள்கிறது. அவரைச்சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்கல்களையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறது.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

(pic courtesy: P.Jayachandran Fans page in FB)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *