சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் துறை கண்காட்சியை நேற்று முன் தினம் (பிப்.14) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. அவர் அந்நிகழ்ச்சியில் பேசியபோது நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்ப ரீதியான முன்முயற்சி ஆகியவற்றின் அடிப்படையான விஷயங்களைக் கொண்டு நகர்ப்புற வடிவமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
தமிழ்நாட்டில் கோவை, மதுரை உள்ளிட்ட 136 நகரங்களுக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மாதத்துக்குள் கோவை மற்றும் மதுரைக்கான திட்டங்கள் வெளியிடப்படும். தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னையை வழிநடத்தப்போவது சென்னையின் 3-வது முழுமை திட்டம்தான் . சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதுநகர வளர்ச்சித் திட்டம் உருவாக்க நிலையில் உள்ளது. அடுத்த ஆண்டு செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையம் திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மிகவும் நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. மாநில மக்கள் தொலைவில் 48% பேர் நகரங்களில்தான் வசிக்கின்றனர். கட்டடங்கள் தாம் நகர்ப்புற வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன. கிளாம்பாக்கம், மாதவரம்,புத்தம்பாக்கம் என்று 3 புதிய புறநகர் பேருந்து நிலையங்கள் உருவாக்கி இருப்பதாகவும் , புத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(pic courtesy: freepik.com)