சென்னை, பிப்.14: புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் குறித்து உலகமெங்கும் தீவிரமாகப் பேசப்பட்டுவருகிறது. வழக்கமான பெட்ரோல், டீசல், அனல் மின்சக்தி போன்ற வளங்களுக்கு மாற்றாக சூரிய மின்சக்தி உள்ளிட்ட மாற்று வாய்ப்புகளை அனைவரும் ஆராயத்தொடங்கியுள்ளனர். பலரும் தங்கள் வீடுகளில் இது தொடர்பான மாற்றங்களையும் செய்துகொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் ரெனிவபிள் எனர்ஜி எக்ஸ்போ என்ற பெயரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை கண்காட்சி நடக்கிறது. நேற்று தொடங்கிய இக்கண்காட்சி, நாளைவரை நடக்கும். 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அங்கு கடைபரப்பியுள்ளன. சென்னை வரத்தக மையத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பார்வையிடலாம். இது வணிகம் செய்வோருக்கான கண்காட்சி என்பதால் தொழில் முனைவோருக்கு மட்டுமே அனுமதியுண்டு. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கூடுதல் தகவல்களை www.renewableenergyexpo.biz என்ற இணையதளத்தில் பெறலாம்.
-ஸ்ரீஜா.