ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் தனிநபர் கடன்கள் இனி கோட்டக் மஹிந்த்ரா கைகளில்!

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் தனிநபர் கடன்கள் இனி கோட்டக் மஹிந்த்ரா கைகளில்!

இங்கிலாந்தைத் தலைமியிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியின் தனி நபர் கடன் கணக்குகள் அனைத்தையும் கோட்டக் மஹிந்த்ரா வங்கி வாங்கிக்கொண்டுள்ளது. இனி மேற்படி கடன் வாடிக்கையாளர்கள் அனைவரும் கோட்டக் வங்கியின் வாடிக்கையாளர்களாகத் தொடர்வர். ரூ.4100 கோடி மதிப்புள்ள கடன் கணக்குகள் இவ்வாறு கைமாறியிருக்கின்றன. அடுத்த மூன்று மாதங்களில் இது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய முடிவை அடுத்து, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி நிதிச்சேவைகள், சிறு-குறு-நடுத்தரத் தொழிற்கடன் ஆகியவற்றில் முழு கவனத்தையும் செலுத்தவிருக்கிறது. இந்தியாவில் தனி நபர் கடன் வழ்ங்கும் தொழில் நல்ல வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதனையடுத்தே, ஒரு வங்கியின் கடன் கணக்குகளை மற்றொரு வங்கி கையகப்படுத்துவது தொடர்கிறது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *