ஒன்றிய அரசின் அரசாங்கத்தின் ஆயுஷ் அமைச்சகம், கடந்த மாதம் 10 ஆம் தேதியன்று ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் 8 வது ஆயுர்வேத தினத்தின்போது மாண்புமிகு மத்திய ஆயுஷ் அமைச்சர், ஸ்ரீ சர்பானந்தா சோனோவால் அவர்கள்மூலம் ஒரு போட்டியை அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆயுர்வேத துறையில் புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கான (புதிய தொழில்முனைவோருக்கு) ஒரு பெரும் சவால் (Ayurveda Start-up Grand Challenge) என்பதுதான் இப்போட்டியின் பெயர். ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகிய திட்டங்களை அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் ஒருங்கிணைத்து இது நடத்தப்படுகிறது.

இப்போட்டியின் முக்கிய நோக்கங்கள்:
- ஆயுஷ் மற்றும் ஆயுஷ் துறையில் உள்ள ஸ்டார்ட்அப்களின் (புதிய தொழில்முனைவோரின்) கண்டுபிடிப்புகளால் சீரமைக்கக்கூடிய சமூக மற்றும் துறை சார்ந்த பிரச்சனைகளைக் கண்டறிந்து அங்கீகரிப்பது…
- ஆயுஷ் துறையில் உள்ள சவால்களைத் தீர்க்கும் திறன் கொண்ட புத்தாக்க தொழில் முனைவோரைக் கண்டறிந்து ஊக்குவிப்பது…
- ஆயுஷ் துறையில் நிலையான வளர்ச்சியை உருவாக்குவதற்கு புது தொழில்நுட்பம் மற்றும் நடைமுறையில் கொண்டுவர ஊக்கிவிக்கவும் .
ஆயுர்வேத ஸ்டார்ட்-அப் கிராண்ட் சேலஞ்சில் பங்கேற்க தகுதிகள் :
- ஆயுர்வேத துறையில் DPIIT அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஆரம்ப கட்ட நிறுவனங்களாக இருத்தல் வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்பட்டால், ஏதேனும் பரிசோ அல்லது மானியமோ பெற ஏதுவான வகையில் புத்தொழில் நிறுவனம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும் (தனிநபர் நிறுவனங்கள் பங்கேற்க இயலாது).
கூடுதல் விவரங்கள் அறிய கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்: https://www.startupindia.gov.in/content/sih/en/ams-application/challenge.html?applicationId=6555c15be4b0eb76656927bd
ஸ்டார்ட்அப் சவாலுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இப்போது 31 ஜனவரி 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு முதல் பரிசு ரூ.5 லட்சம். இரண்டாம் பரிசு ரூ.2.5 லட்சம். மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(முகப்பு புகைப்படம்: நன்றி: Image by Sarah Sever from Pixabay)