மே தினம் வெல்க!

மே தினம் வெல்க!

உழைப்பின்றி இந்த உலகம் இல்லை என்பதுதான் அறிவியல். அதுதான் வரலாறு. எந்தப் பொருளையும் சேவையையும் முழு வடிவம் பெற்றதாக மாற்றித்தருவது கண்ணுக்குத்தெரியாத உழைப்பாளியின் உழைப்புதான். 18 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் உரிமைகள் கடுமையாக நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

அதனை எதிர்த்துக் கிளர்ந்து எழுந்தது அமெரிக்காவின் சிகாகோவில்  புறப்பட்ட தொழிலாளர் பேரணி. 1886ல் 8 மணி நேர வேலை என்ற உரிமையைப் பெற்றுக்கொடுத்தது அப்பேரணியும், அதனையடுத்து நிகழ்ந்த போராட்டங்களும் தியாகங்களும்தான். அந்த மே 1 ஐத்தான் உலகமே தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறது.

உழைப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என்று உழைக்கும் வர்க்கத்தின் உலகளாவிய திருநாள் இதுதான். உடல் உழைப்புத்தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, மூளை உழைப்புத்தொழிலாளருக்கும் இதுதான் திருநாள். உழைப்பைத்தருவோர் மட்டுமல்ல, உழைப்பைப் பெறும் தொழில் துறையினரும் கொண்டாட வேண்டிய தினம்தான் மே-1.

இந்த நன்னாளில் வாசகர்களுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைக்  கூறிக்கொள்வதில் முனைவு மகிழ்ச்சியடைகிறது. தொழிலாளர் தினத்துக்கும் முனைவுக்கும் ஒரு தொடர்புண்டு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே 1 அன்றுதான் முனைவு, சென்னையில் ஒரு எளிய- பூ விற்பனை செய்யும் ஒரு சாலையோரப் பெண் தொழிலாளியால் தொடங்கப்பட்டது.

தனது பிறந்த நாளையும் இன்று உங்களோடு கொண்டாடுவதில் முனைவு மிகுந்த மகிழ்ச்சியடைகிறது.

-ம.விஜயலட்சுமி (பதிப்பாளர்-ஆசிரியர், முனைவு).

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *