நமக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும்போது என்ன நினைக்கிறோம்? ‘எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? நான் யாருக்கு, என்ன தீங்கு செய்துவிட்டேன்…!?’ என்றெல்லாம் நினைக்கிறோம். ஆனால், வாழ்வின் சவால்கள் நாம் செய்த பாவ புண்ணியங்களால் வருவதில்லை. பல நேரங்களில் நமது பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக அமைகிறோம். சில நேரங்களில் வெளியுலக சூழல்கள் நமது சிக்கல்களுக்குக் காரணமாக அமையும்.
எது எப்படி இருப்பினும் பிரச்சனைகளும் சவால்களும் நமக்கு வரமா சாபமா என்று கேட்டால் வரம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஏனென்றால், பிரச்சனைகளின்போதுதான் நமக்கு வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது. நமது பிரச்சனைகளின் புதிய பரிமாணங்கள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. ந நமக்கே நமது பலம் புரிகிறது. அதனைச் சரியாகப் பயன்படுத்தி வெல்கிறோம். பின்னர், ‘அட, இவ்வளவுதானா! இதனைக்கண்டா இவ்வளவு அஞ்சி நடுநடுங்கினோம்?!’ என்று நம்மைப்பற்றியே ஒரு சிரிப்பு வந்துவிடும்.
எனவே, பிரச்சனைகளை ஒரு தண்டனையாகப் பார்க்காமல், புதிய வாய்ப்புகளுக்கான வழியாகப் பாருங்கள். நமது பலத்தை உரசிப்பார்க்கும் உரைகல்லாகப் பாருங்கள். அதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் வெற்றியும் மன நிம்மதியும் அளவிட முடியாததாக இருக்கும்.
-கா.சு.துரையரசு.






வாழ்த்துக்கள்
நல்ல கட்டுரைகள்
மிக்க நன்றி