நாட்டின் இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஹீரோ மோட்டார்ஸ் கார்ப்பரேஷன். அந்நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சாலின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைகள் மேற்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தில்லி, குருகிராம் ஆகிய நகரங்களில் உள்ள அவரது இல்லங்களில் இச்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற சட்டத்தின்கீழ் பவன் முஞ்சாலுக்கு நெருக்கமான ஒருவர்மீது ஏற்கனவே வருவாய் புலனாய்வுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அதனையொட்டியே பவனின் வீட்டில் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே முஞ்சாலின் வீடுகளிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.