சென்னை, மார்ச் 16, 2025: தமிழ்நாடு சட்டசபையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை கோவை சிறுதொழில் சங்கமான கொடிசியா வரவேற்றுள்ளது. அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
’மாண்புமிகு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 2025-2026 பட்ஜெட்டில் உற்பத்தித் துறை, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பிற அறிவிப்புகள் தாக்கல் செய்தார். அவற்றில்…
- கோயம்புத்தூரில் உயர்தர பம்ப் மற்றும் மோட்டார் தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு மையம் நிறுவப்படும்.
- கோயம்புத்தூர் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுடன் இணைந்து சூலூர் மற்றும் பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் குறைக்கடத்தி (SEMICONDUCTOR ) உற்பத்திக்கான பூங்காக்கள் நிறுவப்படும்.
- ரூ. 366 கோடி செலவில் 9 வெவ்வேறு இடங்களில் சிட்கோவால் புதிய தொழிற் பேட்டைகளை நிறுவுவதால் தமிழ்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கப்படும்.
- ரூ. 2.5 லட்சம் கோடி அளவுக்கு 10 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
- அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், மின்சார வாகன தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆற்றல் சார் மையங்களை தொழில் துறையுடன் இணைந்து அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.
- தொழில்-கல்வி நிறுவனங்களின் கூட்டுறவை எளிதாக்க தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிதியை உருவாக்குவதற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படும்.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் - சாலைகள் மேம்பாடுக்காக கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.
- போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.348 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ நீள கோயம்புத்தூர் மேற்கு புறவழிச்சாலை கட்டுமானம் செய்யப்படும்.
- தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிதிக்கு (seed fund) ரூ.20 கோடி ஒதுக்கீடு.
- விண்வெளி தொழில்நுட்பத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்கும் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க விண்வெளி தொழில்நுட்ப நிதிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- நான் முதல்வன் – கல்லூரி கனவு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் சிறப்பு பயிற்சிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் இரண்டு அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்களை நிறுவ ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஊட்டியில் 52 ஏக்கர் பரப்பளவில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் .
இவை அனைத்தும் வரவேற்கத்தக்கவை’ என கொடிசியாவின் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.