இங்கிலாந்து நிறுவனப் பங்குகளை வாங்கும் ஏர்டெல்

இங்கிலாந்து நிறுவனப் பங்குகளை வாங்கும் ஏர்டெல்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்டெல் (பார்தி ஏர்டெல் லிமிடெட்) இங்கிலாந்து சந்தையிலும் பட்டையைக் கிளப்பிவருகிறது. இங்கிலாந்தில் ஏர்டெல் நிறுவனம், ’பார்தி டெலி வெஞ்சர்ஸ் யு.கே’ என்ற பெயரில் இயங்கிவருகிறது.

இங்கிலாந்தின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.டி.குழுமத்தின் 24% பங்குகளை வாங்குவதாக தடாலடியாக அறிவித்திருக்கிறார் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டல்.

இந்த கையகப்படுத்தல் நேரடியாக நடக்கப்போவதில்லை. மாறாக, ஆல்டைஸ் யு.கே என்ற நிறுவனத்தை வாங்கப்போகிறது ஏர்டெல். ஏன் அப்படியாம்? அந்த நிறுவனம்தான் பி.டி. குழுமத்தில் 24% பங்கை வைத்திருக்கிறது. இதை வாங்கினால், அதை வாங்கியதாகத்தானே அர்த்தம்.

தொடக்கத்தில் பார்தி டெலி வெஞ்சர்ஸ், 9.99% பங்குகளை வாங்கும். சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பூர்த்தி செய்தபிறகு 14.51% பங்குகளை வாங்கும். ஆக மொத்தத்தில் 25% பங்குகள் ஏர்டெல் வசம் வந்துவிடும்.

இன்றைய நிலையில் ஆல்டைஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.3000 கோடிக்கு மேல் இருக்கிறது என்பதால், இந்த கைமாற்றல் நடவடிக்கையின் மதிப்பையும் சுமார் இந்த அளவிலேயே கணிக்கலாம்.

-அருண்மொழி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *