தனக்கு எதிரான அனைத்து பிரச்சாரங்கள், கருத்துக்கணிப்புகளையும் தவிடுபொடியாக்கிவிட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், தோல்வியைத் தழுவியிருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா வெற்றிபெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் இமாலய வெற்றியைக் குவித்திருக்கும் ட்ரம்ப், ‘இது ஒவ்வொரு அமெரிக்கருக்குமான வெற்றி’ என்று சொல்லியிருக்கிறார். மேலும் சட்ட விரோத குடியேற்றங்களுக்கு எதிராகப் பேசியிருக்கும் அவர் ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே!’ என்ற கோஷத்தையும் முன்வைத்திருக்கிறார்.
இன்னும் அதிகாரப்பூர்வ வெற்றிச்செய்தி வெளியிடப்படவில்லை என்றாலும் வெற்றிமுகம் எந்தப்பக்கம் என்பது தெரிந்துவிட்டது. இந்திய நேரம் 2 மணி (ந்வ.6) நிலவரப்படி கமலா ஹாரிஸ் 219 இடங்களையும் ட்ரம்ப் 266 இடங்களையும் பிடித்திருக்கின்றனர். பெரும்பான்மைக்கு வெற்றிக்கு மேலும் 4 இடங்களே தேவை என்ற நிலையில் அவரது வெற்றி அசைக்க முடியாததாகிவிட்டது.
இன்றைய சூழலில் ட்ரம்ப்பின் புதிய அரசில் குடியேற்ற சட்டங்கள், அயலுறவுக்கொள்கைகள், ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கைகள் ஆகியவற்றில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-தமிழ்.