செபி: நம்பிக்கையை சம்பாதியுங்கள்

செபி: நம்பிக்கையை சம்பாதியுங்கள்

கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம், இந்தியாவைச்சேர்ந்த அதானி குழுமத்தின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்ததை நாம் அனைவரும் மறந்திருக்கமாட்டோம். அக்குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் உடனடியாக மறுத்தது. இருப்பினும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி, இதனை விசாரித்துவருகிறது.

இந்நிலையில், செபியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாதவி பூரி புச் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது வணிக உலகை ஆட்டம் காண வைத்திருக்கிறது. அதானி குழுமத்தின்கீழ் பதிவு செய் யப்பட்டுள்ள  நிறுவன மான  குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிடிஸ் ஃபண்ட்  எனும் நிதியத்தில் புச், 2015இல்  முதலீடு செய்திருந்தார்.

அதன்பிறகு, அதாவது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ( செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக சேர்வதற்கு முன்) அவருடைய முதலீடுகள்  அவருடைய கணவரின் பெயருக்கு மாற்றப்பட்டன. அதன்பிறகும்  புச் 2018இல் ஒரு மின்னஞ்சல் மூலமாக முதலீட்டை மீட்டெடுப்பு செய்திருக்கிறார் என்பதே ஹிண்ட்ன்பர்கின் குற்றச்சாட்டு.

இந்நிலையில்  அதானி குழுமத்தின் நிறுவனங்களில் சட்டமீறல்கள் நடந்துள்ள னவா என்பதைப் புலன் விசாரணை செய்வதற்காக ஆறு நபர் வல்லுநர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆனால், அவ்வாறு விதிமீறல்கள் ஏதும் நிகழ்ந்ததாக செபி தெரிவிக்கவில்லை என்று அந்த வல்லுநர் குழு தெரிவித்துவிட்டது.

அதானி குழுமத்தின்மீதான 22 குற்றச்சாட்டுகளில் 20 விசாரிக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் 2 குற்றச்சாட்டுகளே பாக்கி எனவும் செபி தெரிவித்திருக்கிறது. அண்மையில், ஒரேயொரு குற்றச்சாட்டு மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்ந்த நிலையில் அதானின் குழுமத்தைச் சேர்ந்த வினோத் அதானி தொடர்புடைய  நிறுவனம் ஒன்றில் புச்,  முதலீடு செய்திருப்பதை ஹிண்டன்பர்க் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இக்குற்றச்சாட்டுகளை செபி அமைப்பும் புச் அவர்களும் ஒருமித்த குரலில் மறுத்திருக்கிறார்கள். தன் பிம்பத்தின்மீதான தாக்குதல் என்கிறார் புச். தனது முதலீடுகள் குறித்து எதனையும் மறைக்காத புச், தான் எவ்வாறு அதானி  நிறுவனத்தின் இயக்குநராக மாறினார் என்பதை விளக்காததை பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன.

விமர்சனங்களுக்கு செவி கொடுங்கள்!

செபி அமைப்பின் தலைவர் மீதான நம்பகத்தன்மை குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை, உலக அளவில் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. பல லட்சம் கோடி அளவுக்கு மக்களின் முதலீட்டுப்பணம் இந்திய பங்குச் சந்தைகளில் இருக்கிறது. எனவே, அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் நேர்மை குறித்து ஐயங்கள் எழுப்பப்படும்போது எதிர்க்கட்சிகளோ, முதலீட்டாளர்களோ, நிதித்துறை வல்லுநர்களோ பதற்றமடைவதையும் குரல் எழுப்புவதையும் ஒன்றிய அரசு எளிதாகக் கடந்துபோகக்கூடாது; முடியாது. விமர்சனங்களை ‘சதி’ என்று சொல்வது அரசியலாகத்தான் புரிந்துகொள்ளப்படும்.

ஏற்கனவே தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா ‘அநாமதேய யோகி’யின் ஆலோசனைப்படி பங்குச்சந்தை முடிவுகளை எடுத்ததை அறிந்து நாடே அதிர்ந்தது. அதிலிருந்தே பங்குச்சந்தை சார்ந்த கேள்விகள் வரும்போது நாடு அமைதியிழப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த சூழலைத் திறந்த மனதுடன் ஒன்றிய அரசு புரிந்துகொண்டு, உடனடியாக மாதவி புச் அவர்களை செபியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். அவர்மீதான குற்றச்சாட்டுகள் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காண்ப்பில் கறாரான விசாரணை அமைப்புகள் விசாரிக்கவேண்டும்.

’சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. செபி போன்ற ஒழுங்காற்று அமைப்புகளை இங்கு அப்பழமொழிக்குப் பொருத்திப்பார்க்கவேண்டும். ஏனென்றால், ஒழுங்காற்று அமைப்புகள் என்பவை வெறும் தனிநபர் நிர்வாகக் குழுக்கள் அல்ல; கோடிக்கணக்கான மக்களின் பணத்தின் பெட்டகம். லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை அதற்குள் நம்பிக்கையோடு உறங்கிக்கொண்டிருக்கிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *