சோனி லைவ் ஓடிடி சேவையை நிறுத்தும் டாடா ஸ்கை?

சோனி லைவ் ஓடிடி சேவையை நிறுத்தும் டாடா ஸ்கை?

புகழ்பெற்ற டிடிஎச் சேவை நிறுவனமான டாடா ஸ்கை, தனது சோனி லைவ் ஓடிடி சந்தாதாரர் சேவைகளை சுருக்கிக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

தனது வாடிக்கையாளர்களுள்  பாதிப்பேர் 25% அளவுக்கே சோனி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதாக அது காரணம் கூறியிருக்கிறது. வாடிக்கையாளர் வரவேற்பைப் பொறுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாகவே இச்சேவை குறைத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.

ஆனால், சோனி நிறுவனம் இதனை மறுத்திருக்கிறது. தனது நேயர்களுக்குப் பிடித்த தரமான உள்ளடக்கங்களை மட்டுமே அது வழங்குவதாகவும், வாடிக்கையாளர் வருகை மற்றும் விருப்பங்கள் குறித்த ஆய்வுகளை அது அவ்வப்போது மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று வாரியமான ட்ராயின் விதிமுறைகளைத் தாங்கள் தீவிரமாகப் பின்பற்றி வருவதாகவும் அதன்படி எவ்விதமான விதிமுறை மீறல்களும் நடக்கவில்லை என்று அது கூறியிருக்கிறது.

-அருண்மொழி.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *