புத்தகப்பை எடைக்கு கட்டுப்பாடு: கேரளம் அதிரடி!

புத்தகப்பை எடைக்கு கட்டுப்பாடு: கேரளம் அதிரடி!

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை ஓசையின்றிச் செய்து, நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்துவருகிறது கேரளம். அதன் அடுத்த கட்டமாக, குழந்தைகளின் பள்ளிப்பை சுமையைக் குறைக்கும் புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

பள்ளிக்குழந்தைகளுக்கு பாடம் ஒரு ஒரு சுமையென்றால், பாடநூல்கள் அடங்கிய பைகளைத் தூக்கிச் செல்வது மற்றொரு சுமையாக இருக்கிறது. சராசரியாக 10 முதல் 15 கிலோ வரையிலான எடையில் பைகளைச் சுமந்து செல்கின்றனர் குழந்தைகள்.

நடக்கும்போது சிரமம், ஓடிச்சென்று பேருந்தில் ஏறும்போது தடுமாறுதல், அனைத்து பாடநூல்களையும் பாதுகாக்கவேண்டிய தேவை, முதுகுவலி, கூன் விழும் அபாயம் என்று பல்வேறு சிரமங்களைக் கொண்டதாக இப்பிரச்சனை இருக்கிறது.

இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறது கேரளத்தின் பள்ளிக்கல்வித்துறை. இதுகுறித்துப் பேசியுள்ள அம்மாநிலத்தின் கல்வியமைச்சர் சிவன்குட்டி, ”பாடநூல் சுமையைக் குறைப்பதற்காக ஒவ்வொரு பாடநூலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது.

பாடவேளையின் தேவைக்கேற்ப அவற்றைப் பள்ளிக்கு எடுத்துச் செல்லலாம். இது பெற்றோரிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இருப்பினும் மேலும் இச்சுமையைக் குறைக்க ஒரு நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது” என்றார்.

அதன்படி, ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கொண்டுசெல்லும் பள்ளிப்பையின் எடை 2.2 கிலோவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. மேலும், 10 ஆம் வகுப்பு மாணவரின் பள்ளிப்பையின் மொத்த எடை 4.5 கிலோவுக்கு மிகக்கூடாது. இது ஒருபுறமிருக்க, மாதத்தில் 4 நாட்கள் ‘பைகள் இல்லாத பள்ளி நாட்கள்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

அந்நாட்களில் மாணவர்கள் பாடநூல்களைப் பள்ளிக்கு எடுத்துவரவேண்டியதில்லை. அந்நாட்களில் நீதிநெறி வகுப்புகள், விளையாட்டு வகுப்புகள் என்று அவர்களின் உடலையும் மனதையும் பக்குவப்படுத்தும் செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

தமிழகமும் இந்த நடைமுறையைப் பின்பற்றலாமே!

-ம.விஜயலட்சுமி.

 

(முகப்புப்படம்: freepik)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *