சிறு வங்கித்துறை நிறுவனங்களில் மிக முக்கியமான ஒன்று ஈக்விட்டாஸ். இது, மிக முக்கியமாக கிராமப்புறங்களில் தனது வணிகத்தை விரிவுபடுத்திவருகிறது. சுய உதவிக்குழுக்களின் விருப்பத்துக்குரிய வங்கியாகவும் திகழ்ந்துவருகிறது.
இவ்வங்கி, தற்போது தனது நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 70.6% அதிகரித்திருக்கிறது. அதாவது, ரூ.198 கோடி. கடந்த ஆண்டு இதே காலாண்டில் அது ரூ.116 கோடி அளவுக்கே நிகர லாபத்தை சம்பாதித்திருந்தது. இவ்வங்கியின் வைப்புகளின் அளவு ரூ.30,839 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டைவிட இது 42% அதிகம் ஆகும்.