சூரிய ஒளித்தகடுகளுக்கு 25% மானியம்: கொடிசியா கோரிக்கை

சூரிய ஒளித்தகடுகளுக்கு 25% மானியம்: கொடிசியா கோரிக்கை
2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 14-ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று சபாநாயகர் எம். அப்பாவு பிப்ரவரி 18  அன்று தெரிவித்திருந்தார் (தற்போது, நிதிநிலைஅறிக்கை இம்மாதம் 3 ஆம் வாரத்துக்குத் தள்ளிப்போகும் என்று தெரிகிறது) .

இதைத் தொடர்ந்து சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த தமிழ்நாடு முன் நிதிநிலை அறிக்கை 2025-26 கலந்துரையாடல் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கம் – கொடிசியா கலந்துகொண்டு தங்களுடைய முக்கிய பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. அதுகுறித்த ஒரு பார்வை: 

 

கொடிசியா முன்வைத்த முக்கிய பரிந்துரைகள்:

  1. கூரைகளில் சூரிய ஒளி  திட்டம் (Rooftop Solar Initiative):

    • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி அமைப்பதற்கு 25% மானியம் வழங்குமாறு கொடிசியா கோரிக்கை வைத்தது.
    • இது தொழில்களின் செயல்பாட்டு செலவைக் குறைக்கும், மேலும், மின்சாரத் தேவையை சமாளிக்க மாநில அரசின் நிதிச் செலவையும் குறைக்கும்.
    • 60% குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழில்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் இயங்குவதால், இந்தத் திட்டம் அதிக அளவில் பயனளிக்கும்.
  2. உரிமைப் பத்திர வைப்பு சான்றிதழ் (MOD) கட்டண நிவாரணம்:

    • சிறு தொழில் கடன் வாங்கும்  தொழில்  நிறுவனங்கள், தங்கள் சொத்துகளை வங்கிகளுக்கு வைப்பாக வைக்க வேண்டியிருக்கிறது. அந்த ஆவணத்தைப் பதிவு செய்வதற்கான பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும்.
  1. கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம்:

    • அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சத்தியமங்கலம் சாலை மற்றும் தொண்டாமுத்தூர் சாலை ஆகிய முக்கிய பகுதிகளை இணைக்கும் 136 கி.மீ. மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். 
    • கார்த்திகேயன், தலைவர், கொடிசியா
  1. நகர்ப் பொது கட்டமைப்பு மேம்பாடு:

    • கோயம்புத்தூர் பெருநகர் வளர்ச்சி ஆணையம் (CUDA) உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
    • ஒருங்கிணைந்த  பெருநகர போக்குவரத்து ஆணையம் (UMTA) கோயம்புத்தூரில் செயல்படுத்த வேண்டும்.
    • சென்னை, திருச்சி போன்ற நகரங்களைப் போல் கோயம்புத்தூரிலும் ஒரு பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
  1. நீர்வள மேலாண்மை:

    • நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கவும் அவற்றை மேம்படுத்தவும் பணிகள் வேகமாக மேற்கொள்ள வேண்டும்.
    • கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் தூர்வாருதல் பணிகளுக்காக (Desilting) நிதி ஒதுக்க வேண்டும்.

-இவ்வாறு கொடிசியா சிறுதொழில் நிறுவனங்களின் கோரிக்கையைத் தமிழக அரசின் முன்பு வைத்துள்ளது.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *