மூன்றாவது ஆண்டில் முனைவு.காம்!

அன்பு நிறைந்த நண்பர்களே,

 

உங்கள் மனங்கவர்ந்த முனைவு.காம் இணைய தளம் இன்று தனது இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. ஆம், மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 

 

 

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தி.நகரில் ஒரு சாலையோர பூக்கடைத் தொழிலாளி ஒருவரின் கையால் தொடங்கிவைக்கப்பட்டது முனைவு.காம்.

 

pray

அதற்குக் காரணம் இருக்கிறது.

 

முனைவு யாருக்காக சேவையாற்ற உறுதி கொண்டுள்ளதோ, அவர்கள் கைகளால் அது தொடங்கிவைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

 

அடித்தட்டு மக்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வாழும் படித்த இளைஞர்கள், கிராமப்புறத் தொழில்முனைவோர், சிறு-குறு-நடுத்தரத் தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள தொழில் நுட்பத் தொழில் முனைவோர் ஆகியோர்தான் நமது இலக்குகள்.

 

இதரர்க்கு உதவப் பலர் இருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும்.

 

இந்த 2 ஆண்டு பயணத்தில் நம்பகமான தகவல்களை, யதார்த்த நிலையை மனதில் கொண்டு எளிய தமிழில் இலக்கணப் பிழைகள் இல்லாத மொழியில் முனைவு வழங்கியிருப்பதாகப் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.

 

பெரிய பொருளாதாரப் பின்னணி ஏதும் இல்லா நிலையிலும் உங்கள் அன்பாலும் ஆதரவாலும் மட்டுமே  70,000 க்கும் மேற்பட்ட வாசகர்கள் என்ற நிலையை முனைவு அடைந்திருக்கிறது.

 

நம்பிக்கையான, நேர்த்தியான பொருளுக்கு என்றைக்குமே தமிழர்கள் ஆதரவு அளிப்பர் என்ற நம்பிக்கையை இது மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

 

முனைவு, மாத இதழாக அறிமுகம் செய்யப்பட்டபோது அதனைத் தொடங்கிவைத்த கவின்கேர் நிறுவனத் தலைவர் திரு.சி.கே. ரங்கநாதன், துகார் குழுமத்தின் தலைவர் திரு.பதம் துகார்,

உடன் நின்று தோள் கொடுத்த தம்பிகள்  நரேஷ் குமார், சத்யராஜ், லா பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் திரு.சரவண அரவிந்த், சென்னை பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சுதீஷ் குமார்,

 

குவெஸ்ட் ப்ரோ நிறுவனத்தின் தலைவர் திரு.ரங்க ராஜூ,  நண்பர் திரு.தியாகராஜன், மறைந்த நண்பர் திரு. அருண் பால், சின்னத்திரை நடிகர் ஆண்டனி, மன நல ஆலோசகர் திருமதி.நளினி சந்திரசேகரன், டிசம்பர் 3 அமைப்பின் தலைவர் பேராசிரியர்.டி.எம்.என்.தீபக், நண்பர் நாணா (எ)நாராயணன், இலச்சினையை (லோகோ) வடிவமைத்துக்கொடுத்த தம்பி கார்த்தி, கார்ட்டூனிஸ்ட் பாலா  ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.

 

stick-people-2324013_640

அதேபோல பொறுப்பாசிரியர் திரு.ஐயன் கார்த்திகேயன், புகைப்பட, வீடியோ கலைஞன் தம்பி கிருஷ்ணா (கே.ஆர்.மீடியா), பத்திரிகையாளர்கள் கவிதா பாலாஜி, தஞ்சை என்.ஜே. கந்தமாறன், காயத்ரி, மரிய ஜீன், கதிரவன், சங்கரி, இன்பராஜ், அல்லி (எ) காமாட்சி,

 

தளத்தை வடிவமைத்து நிர்வகித்து தோள் கொடுக்கும் ஜான் மோசஸ் (எ)நந்த குமாரன் ஆகியோருக்கு நன்றி சொல்வது அவர்களை அந்நியப்படுத்துவதாகும். எனவே, உங்களுடன் மகிழ்ச்சியோடு கைகுலுக்குகிறேன் நண்பர்களே!

 

எல்லாவற்றுக்கும் மேலாக நாளைய தொழில் முனைவோராக உருவெடுக்க இருக்கிற இன்றைய வாசகர்கள், தொழில் முனைவோர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்…

 

என்றென்றும் அன்புடன்,

ம.விஜயலட்சுமி

(ஆசிரியர்)

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *