நிறைவைக் கணித்தல் சாத்தியமில்லை (ஜென் கதைகள்)

ஒரு குளத்தின் கரையில் இரண்டு ஜென் துறவிகள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். குளத்தில் கூட்டம் கூட்டமாக மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.

buddha-1395313_1280

அதைப் பார்த்த ஒரு துறவி சொன்னார்….

 

“அந்த மீன்களைப் பாருங்க. எத்தனை ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன!”

 

அடுத்த துறவி சொன்னார்:

“அவையெல்லாம் ஆனந்தமாக இருப்பதாய் நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? ஏனென்றால்  நீங்கள் அந்த மீன் கிடையாதே!”

 

அதற்கு முதல் துறவி,

“அது ஆனந்தமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். அதை நீங்கள் எப்படி இல்லை என்று சொல்ல முடியும்? ஏனென்றால், நீங்கள் நான் இல்லையே!” என்றார்.

 

நிர்வாக நீதி:

நீங்கள் மேலாளராக இருந்தாலும் சரி, தொழிலாளராக இருந்தாலும் சரி, உங்கள் நிர்வாகமோ, உங்கள் உழைப்போ மற்றவர்க்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது என்ற முடிவுக்கு சுலபத்தில் வந்துவிட முடியாது, சொல்லிவிடவும் முடியாது.

-தஞ்சை.என்.ஜே. கந்தமாறன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *