பயணங்கள் பத்தும் செய்யும்!

 

தொழில்முனைவோருக்கு திறமை,உழைப்பு இருந்தால் மட்டும் போதாது காலத்திற்கு ஏற்றார் போல தங்களை மெருகேற்றிக்கொள்ள வேண்டும். அதில் ஒன்றுதான் பயணம்.

 

வெறுமனே பத்துக்குப் பத்து அறையில் அமர்ந்தபடி அலைபேசியையும்,ஒலி,ஒளி கலந்தாய்வையும்(VIDEO CONFERENCE) நம்பிக்கொண்டு இருந்த இடத்திலேயே இருப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது.

personal-3410779_640

தொழில் சார்ந்த பயணங்களை அதிகம் மேற்கொள்ள மேற்கொள்ள தொழில் சார்ந்த வளர்ச்சிப் பாதைகள் விஸ்தாரமாகும். பயணங்களை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாமா?

 

நேரில் சென்றால் வெற்றி நிச்சயம்!

 

எங்கேயோ அமர்ந்தபடி தொழில் ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடித்துவிட முடியாது. முகத்தோடு முகம் பார்த்து தொழில் சார்ந்த செய்திகளைப் பேசும்பொழுது அதன் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும். நம்பிக்கையின் காரணமாக பரஸ்பரம் நிறையத் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

 

laptop-3196481_640

தொழில் சார்ந்த ஒத்த எண்ணங்கள் இருக்கிறதா என்பதையும் உணர முடியும்.

 

அதனால் சிரமம் பார்க்காமல் பயணங்களை மேற்கொண்டு தொழிலில் வெற்றிவாகை சூட முயற்சி செய்யலாம்.

 

முகம் தெரியாத மனிதர்களின் நட்பு 

அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்த மனிதர்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதில் பலன் இல்லை.அதனால் பயணப்படுங்கள்.யார் கண்டது? நீங்கள் பயணிக்கின்ற விமானத்தில் அல்லது பயணத்தின் போது நீங்கள் சாப்பிடுகின்ற உணவகத்தில் அதுவரை நீங்கள் சந்தித்திராத புது மனிதர்களின் சிநேகம் உங்களுக்குக் கிடைக்க நேரிடலாம்.

 

அந்த சந்திப்பு உங்களின் தொழில் பாதையையே கூட மாற்றி அமைக்க நேரிடலாம்.அதுமட்டுமல்ல உங்களது பழைய வாடிக்கையாளரை சந்திக்கும்பொழுது அதுவரை நீங்கள் அணுகியிருக்காத தொழில் சார்ந்த  புது கோணத்தில் அவரை அணுக நேரிடலாம். இதன் காரணமாக உங்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்கலாம்.

 

நேரில் சந்தித்தால் எதுவும் நடக்கும்!

தொழில் சார்ந்த பேச்சுவார்த்தைகள் அலைபேசியில் இழுத்துக்கொண்டே செல்கிறதா? வாடிக்கையாளரின் அல்லது புதிய மனிதர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் சிரமம் இருக்கிறதா? ஒருநடை பயணம் செய்து நேரில் அவர்களை சந்தியுங்கள்.

 

உங்களது தொழில் குறித்து அவர்களுக்குத் தெளிவாக விளக்குங்கள். உங்களது உறுதியான,தெளிவான அணுகுமுறையை அவர்கள் நேரில் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

 

இதன் காரணமாக  தங்கள் எண்ணத்தையே மாற்றிக்கொள்ள நேரிடும். நடக்காது என்று சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு நடக்கலாம். இதுபோன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தும் சக்தி பயணங்ளுக்கு உண்டு.

 

தவறான புரிதல்களைத் தவிர்க்க…

தொழில்முனைவோர் வாடிக்கையாளர் இருவருக்கும் இடையில் தொழில்சார்ந்த புரிதல் சரியாக இருக்கவேண்டும். இல்லையேல் அந்தத் தொழில் வாய்ப்பு கையை விட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது.

 

வாடிக்கையாளர் எந்த ஊரில் இருந்தாலும் சோம்பேறித்தனப்  படாமல் பயணம் செய்து அவர்களை நேரில் சந்தியுங்கள். பேசுங்கள். தவறான புரிதல்கள் சரிசெய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. கையைவிட்டுப் போய்விடுமோ என்று கவலைப் பட்ட தொழில் வாய்ப்பு கையில் வந்துசேரவும் கூடும். அதனால் பயணம் செய்யுங்கள் நண்பர்களே…

-சு.கவிதா.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *