ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலைப் பயிற்சி

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலைப் பயிற்சி

பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி – கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்

ஈரோடு,21 ஜனவரி 2026: கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில், பெண்களுக்கான இலவச அழகுக்கலை (Beauty Parlour) பயிற்சி வரும் 27.01.2026 முதல் 07.03.2026 வரை, மொத்தம் 35 நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பயிற்சி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், உணவு உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும், 19 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் உள்ள பெண்கள் இப்பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு கட்டாயம் என்பதால், விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்பு எண்கள்:
87783 23213
72006 50604
0424 – 2400338

பயிற்சி நடைபெறும் இடம்:
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
அரசினர் பொறியியல் கல்லூரி (IRTT) ரோடு,
வாசவி கல்லூரி அருகில்,
சித்தோடு, ஈரோடு.

இட வரைபட இணைப்பு:
https://maps.app.goo.gl/A8g1tgLrzXzUwyEn6

ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *