சென்னை, மார்ச் 11: கேரளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஃபெடரல் வங்கி, தனது விளம்பரத் தூதராக நடிகை வித்யா பாலனை நியமித்திருக்கிறது. வேகமாக வளர்ந்துவரும் அவ்வங்கி, முதன்முறையாக விளம்பர தூதர் நியமனத்தில் இறங்கியிருக்கிறது. வித்யா பாலன், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித்திரைப்படங்களில் புகழ்பெற்றவர். எனவே, தங்கள் வங்கி, மொழி/பிரதேச எல்லைக்கோடுகளைக் கடந்த ஒன்று என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் வித்யாபாலன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஃபெடரல் வங்கியின் விளம்பரங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் முதலியவற்றில் இனி தொடர்ந்து அவர் தோன்றுவார்.
-தமிழ்.
(படம்: நன்றி: வித்யா பாலனின் முகநூல் பக்கம்)





