தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மார்ச் 25 (நாளை) முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு திருமண புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் தொடர்பாக தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்க உள்ளது.
குறைந்தபட்ச தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. 18 வயது நிரம்பிய ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம் ரூ. 12000. பயிற்சி நேரம் – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இணையத்தில் முன்பதிவு அவசியம்.
புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ எடிட்டிங் நுட்பங்கள், வடிவமைப்பு, மறுசீரமைப்பு போன்ற பயிற்சியுடன் புகைப்பட வணிகத்துக்கான வழிமுறைகள் ஆகியவை குறித்தும் கற்றுத் தரப்படும். அரசு உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களையும் அங்கு தெரிந்து கொள்ளலாம்.
பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதி செய்து கொடுக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.