மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுத் துறை சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் ஆகும் (NIEPMD – National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (Divyangjan). இந்த நிறுவனத்தில் அறிவுசார் குறைபாடுள்ள வயது வந்தோருக்கு வேலை கிடைக்க உதவும், வயதுவந்தோரின் சார்பற்ற வாழ்வுக்கான துறை (Department for Adult Independent Living – DAIL) , மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக இலவச பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது.

தகுதி :

பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுகள், காது கேளாதோர் மற்றும் கேட்கும் திறன் குறைபாடு, நகரும் திறன் குறைபாடு , அறிவுசார் குறைபாடுகள் , ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு , மனநோயால் பாதிப்பு,

குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உள்ளிட்ட உடல் திறன் சவால்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

படிப்பு:
பத்தாம் வகுப்பு (SSC) அல்லது பன்னிரண்டாம் வகுப்பு (HSC) அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் பிபரவரி 10, 2025 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :
10 ஆம். வகுப்பு/ 12 ஆம் வகுப்பு / ஏதேனும் பட்டப்படிப்பின் சான்றிதழ்
UDID அட்டை
ஆதார் அட்டை
சமூகச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்
இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய –
முகவரி:
Department of Adult Independent Living (DAIL),
NIEPMD, Chennai.

தொடர்பு எண்கள் – 8124862799 / 8778425556; மின்னஞ்சல்: niepmd.dail@gmail.com

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

(Pic courtesy: freepik)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *