சென்னை, மார்ச் 7: தமிழக அரசு, மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்திவருகிறது. உள்ளூர் பொதுமக்கள், வாசகர்கள், படைப்பாளிகள் இதனை வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 7) காலை 10 மணிக்கு திருவள்ளூரில் புத்தகக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. மாண்புமிகு அமைச்சர் ஆவடி நாசர், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் இ.ஆ.ப்., ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைத்தொடங்கிவைத்தனர். இதில் வாசகர்களுக்கு அனுமதி இலவசம். இம்மாதம் 17 ஆம் தேதிவரை இக்கண்காட்சி நடைபெறும்.

algolist: 0;
multi-frame: 1;
brp_mask:8;
brp_del_th:0.0128,0.0000;
brp_del_sen:0.1000,0.0000;
motionR: 0;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (1, 0);aec_lux: 79.28371;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 37;
கண்காட்சி வளாகத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளும் (மூன்று சக்கர வாகனம் வழங்கல் உட்பட) வழங்கப்பட்டன. அரசு சார்ந்த அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 107 அரங்குகளில் பதிப்பகங்கள் இங்கு கடைவிரித்துள்ளன. ஆர்வமுள்ளோர் சென்று பயன்பெறலாம்.
சென்னை புத்தகக் கண்காட்சியைப்போலவே சிற்றுண்டி, உணவு அரங்கங்கள் இங்கு அமைக்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். இன்று முதல் நாள் என்பதால் விரைவில் அக்கோரிக்கை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-அருண்மொழி.