மோசடி ஆட்சேர்ப்பு விளம்பரங்கள்: டாடா எலெக்ட்ரானிக்ஸ் எச்சரிக்கை

மோசடி ஆட்சேர்ப்பு விளம்பரங்கள்: டாடா எலெக்ட்ரானிக்ஸ் எச்சரிக்கை

சென்னை, செப்.4, 2025: டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தனது பெயரில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்படும் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிறுவனத்தின் அறிவிப்பில், “டாடா எலக்ட்ரானிக்ஸ் அல்லது அதன் துணை நிறுவனங்களிலிருந்து வந்ததாகக் கூறி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஆட்சேர்ப்பாளர்களைப் போல நடித்து, தனிப்பட்ட தகவல்களை கேட்பதும், பயிற்சி அல்லது காப்பீட்டு செலவுகளுக்கான பெயரில் பணத்தை கோருவதும் நடைபெறுகின்றன” என கூறப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனம்  கூறியதாவது:

  • டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தேவையற்ற வேலை வாய்ப்பு அறிவிப்புகளை அனுப்புவதில்லை.

  • ஆட்சேர்ப்பின் எந்த கட்டத்திலும் செயலாக்கக் கட்டணம் அல்லது பாதுகாப்பு வைப்புத் தொகை போன்ற பணம் கேட்கப்படுவதில்லை.

  • வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tataelectronics.com மூலமே செய்யப்பட வேண்டும்.

  • சந்தேகத்துக்குரிய வேலை சலுகைகள் தொடர்பாக உறுதிப்படுத்த careeroptions@tataelectronics.co.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

மோசடி அல்லது அடையாளத் திருட்டு நடந்ததாக சந்தேகமிருந்தால், அருகிலுள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இறுதியாக, “இத்தகைய போலியான தகவல் தொடர்புகளுக்கோ அல்லது அதன் விளைவுகளுக்கோ டாடா எலக்ட்ரானிக்ஸ் பொறுப்பு ஏற்காது” எனவும் நிறுவனம் தெளிவுபட அறிவுறுத்தியுள்ளது.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *