ரூ.1706 கோடி நிதி திரட்டிய போர்ட்டர் நிறுவனம்

ரூ.1706 கோடி நிதி திரட்டிய போர்ட்டர் நிறுவனம்

சென்னை, மே 9: உள்ளூராக இருந்தாலும் சரி, வெளியூராக இருந்தாலும் சரி, நமது பொட்டலங்கள், பொருட்கள், மூட்டைகள், தட்டு முட்டு சாமான்கள், நூல்கள் என்று அனைத்தையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்வது பெரிய வேலையாக இருக்கிறது. இந்த தேவையப்புரிந்துகொண்ட போர்ட்டர் போன்ற நிறுவனங்கள் இத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றன. குறைந்த செலவில் சிறிய அளவிலான சரக்குப்போக்குவரத்து வசதியை இவை தருகின்ம்றன. இத்துறையில் உள்ள வாய்ப்புகளை அறிந்துகொண்ட துணிகர முதலீட்டு நிறுவனங்களும் தனியார் நிதியங்களும் தாராளமாகவே இந்நிறுவனங்களுக்கு முதலீட்டை தாராளமாகவே வாரி வழங்குகின்றன.

அந்த வகையில் போர்ட்டர் நிறுவனத்துக்கு கெடாரா கேப்பிட்டல் மற்றும் வெலிங்டன் மேனேஜ்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டாக ரூ.1706 கோடியை விரிவாக்க முதலீடாக வழங்கியிருக்கின்றன. போர்ட்டர் நிறுவனத்தின் தொழில்நுட்ப விரிவாக்கம், ஊழியர் நிர்வாகம்  மற்றும் இதர விரிவாக்கப்பணிகளுக்காக இந்நிதி வழங்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் போர்ட்டர், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக மதிப்பிடப்படுகிறது.

-தமிழ்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *