முதலீட்டாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இதோ…வங்தேவிட்டது.
இதன் 75%க்கும் மேற்பட்ட பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும், அதிகபட்சம் 15% பங்குகள் நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கும், 10% பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களான பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன.
விலை: பங்கு ஒன்றின் விலை ரூ.72 முதல் ரூ.76 வரை (முகமதிப்பு: ரூ.10)
குறைந்தபட்ச முதலீடு: குறைந்தது 195 பங்குகளையாவது வாங்க விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு 195ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், மின்சார வாகனங்கள், அது சார்ந்த உதிரி பாகங்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இதுவரை 7 தயாரிப்புகளை சந்தையில் வைத்திருக்கும் இந்நிறுவனம், மேலும் 4 புதிய தயாரிப்புகளைக் களமிறக்க உள்ளது.
(சட்டப்பூர்வ எச்சரிக்கை: பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும்முன்பு அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, உங்களது யோசனைப்படி முதலீடு செய்யவும்.)