சென்னை, நவ.19, 2024: ஒன்றிய அரசுக்குச் சொந்தமான என்.டி.பி.சி எனர்ஜி நிறுவனம் பங்கு வெளியீட்டில் இறங்கியிருக்கிறது. மொத்தம் 92.59 கோடி பங்குகள் வெளியிடப்படுகின்றன. பங்கு ஒன்றின் விலை ரூ.102-108வரை இருக்கக்கூடும். இம்மாதம் 22 ஆம் தேதிவரை (வெள்ளிவரை) இப்பங்குக்கு சில்லரை முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
நவ.25 வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் டிமேட் கணக்குகளில் பங்கு வரவு வைக்கப்படும். மறுநாளான 26 அன்று மும்பை பங்குச்சந்தையிலும் தேசிய பங்குச்சந்தையிலும் இப்பங்குகள் பட்டியலிடப்படும். இன்றைய நிலையில் பங்குகளைப்பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ள்னர். இதனை தேசிய பங்குச்சந்தையும் ஆமோதித்துள்ளது.
(சட்டப்பூர்வ எச்சரிக்கை: பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்ட்டவை. முதலீடு செய்யும் முன்பாக வழங்கு பத்திரத்தை கவனமாகப்படித்துவிட்டு முடிவெடுக்கவும்)