சென்னை, பிப்.24: புகழ்பெற்ற மின்சார கார்கள் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா, விரைவில் மகாராஷ்டிர மாநிலத்தில் தனது தொழிற்சாலையை அமைக்க கிருக்கிறது. புனே அருகில் உள்ள சக்கான், சிகாலி ஆகிய இடங்களில் இதற்கான நிலம் வழங்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சந்தித்ததை அடுத்து தொழிற்சாலைக்கான முன்னெடுப்புகள் வேகமெடுத்திருக்கின்றன.
ஏற்கனவே தனது தொழில்நுட்பப் பிரிவு ஒன்றை புனேவில் டெஸ்லா நடத்திவருகிறது. இந்நிலையில் அங்கு தொழிற்சாலை அமைவது அவர்களுக்கு உற்பத்தி செயல்பாடுகளை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி வரி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப்பின் கருத்தையே எலான் மஸ்க்கும் கொண்டிருப்பதால் இறக்குமதி வாகன வரி விதிப்பில் சில மாற்றங்கள் நடக்கக்கூடும் என்று வாகன உற்பத்தித்துறையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
.தமிழ்.
(Image by user6702303 on Freepik)