வளைகுடா நாடுகளில் புகழ்பெற்ற லுலு குழுமம் குறித்து உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். உலகமெங்கும் 25 நாடுகளில் 261 ஷாப்பிங் மால்களை இந்நிறுவனம் இயக்கிவருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.67 ஆயிரம் கோடிக்கு இந்நிறுவனம் வர்த்தகம் செய்துவருகிறது. இதன் உரிமையாளர் ஏம்.ஏ.யூசுப் அலி, கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்.
இவரது நிறுவனம், தற்போது பங்கு வெளியீட்டில் இறங்கத் தீர்மானித்திருக்கிறது. இங்கல்ல, சவூதி அரேபியாவில். மொத்தம் 260 கோடி பங்குகள்மூலம் நிதி திரட்டப்படும் என்று தெரிகிறது. அதாவது, அந்நிறுவனத்தின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளில் 25% ஐ பொதுமக்களுக்குத் தரவிருக்கின்றனர்.
இன்னும் ஒரு வாரத்தில் பங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது. இதில் திரட்டப்படும் தொகையைக்கொண்டு மேலும் தன் வணிகத்தை விரிவுபடுத்த இருக்கிறது லுலு குழுமம்.