நாட்டின் முக்கியமான மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான கிரேட் லேக்ஸ், அனுபவம் மிக்க நிறுவன ஊழியர்களுக்கான மேலாண்மைப் படிப்புகளை (Post Graduate eXecutive Program in Management (PGXPM) வழங்கிவருகிறது. எக்சிகியூடிவ் எம்.பி.ஏ என்று அழைக்கப்படும் இப்படிப்பில் சேர நீங்கள் ஏதானும் கார்ப்பரேட் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிர்வாகியாக அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும்.
மொத்தம் 20 மாதங்கள் இப்படிப்பு இருக்கும். இணைய வழி + நேரடிப் பயிற்சி என்று இரண்டும் கலந்த படிப்பு இது. 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனது முன்னாள் மாணவர்களுடன் உங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தித் தருவதாகவும் சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம் கூறுகிறது.
கார்ப்பரேட் உலகின் அடுத்தடுத்த ஏணிகளை எட்டிப்பிடிக்க விரும்புவோர் இதுபோன்ற படிப்புகளைப் பரிசீலிக்கலாம். இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு கிரேட் லேக்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.
கூடுதல் தகவல்களுக்கு: https://t.ly/NNFlZ
-லட்சுமி.
(Image by Mohamed Hassan from Pixabay)