எட்டிஹாட் ஏர்வேஸ், புதிய கட்டண சலுகை

எட்டிஹாட் ஏர்வேஸ், புதிய கட்டண சலுகை

புகழ்பெற்ற விமான சேவை நிறுவனமான எட்டிஹாட், தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சலுகையை அறிவித்துள்ளது. இன்று முதல் (26 ஆகஸ்ட், 2024) செப்டம்பர் 1 ஆம் தேதிவரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேதிகளில் முன்பதிவு செய்வோர், 15 செப் 2024 முதல் 20 மார்ச் 2025க்கு இடைப்பட்ட காலத்தில் பயணம் செய்யலாம். மேலும் தனது வாடிக்கையாளர்களுக்காக லவுஞ்ச் வசதியிலும் சில கூடுதல் சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஹைதராபாத், தில்லி, மும்பை, ஜெய்ப்பூர் முதலிய நகரங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

எட்டிஹாட், தனது விமான சேவைகளை விரிவாக்கமும் செய்துவருகிறது. அதன்படி பாஸ்டனுக்கு தினசரி சேவை, ஃபிராங்க்பர்ட், ரோம் நகரங்களுக்கு தினசரி இரண்டு விமான சேவைகள், பாங்காக்-புக்கெட் இடையே மூன்று விமான சேவைகள் என்று சேவைகள் விரிவாக்கப்படுகின்றன.

பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு பெரிய அளவிலான திரையுடன்கூடிய தொலைக்காட்சி, உயர்தரமான ஹெட்போன், வசதியான படுக்கை, ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதி, புளூடூத், எப்போது வேண்டுமானாலும் உணவைத் தருவிக்கும் வசதி முதலிய பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்களை https://www.etihad.com/en-ae/ என்ற இணையதளத்தில் பெறலாம்.

(Image by Afif Ramdhasuma from Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *