சென்னை, டிச.1: தமிழக அரசின் ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), ஆதி கலைக்கோல் என்ற் பெயரிலான விழா ஒன்றை இன்றும் நாளையும் சென்னை வர்த்தக மையத்தில் நடத்துவதாக அறிவித்திருந்தது. இதுகுறித்த விரிவான செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம். தற்போது ஃபெங்கல் புயலை அடுத்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களி தொடர்மழை பெய்து வருகிறது. அதனையடுத்து, தாட்கோ இந்நிகழ்வை தள்ளி வைத்திருக்கிறது. இன்று தொடங்குவதற்கு மாறாக, நாளையும் நாளை மறுநாளும் (டிச.2, 3) நடைபெறும் என்று அவ்வமைப்பு தெரிவித்திருக்கிறது. நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பதிவு செய்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Image by neo tam from Pixabay)