பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பழனி, திண்டுக்கல் மக்களுக்கு ஒரு நற்செய்தி வந்திருக்கிறது. பொதுவாக கோவை மக்கள் தென் மாவட்டங்களுக்குச் செல்வதாக இருந்தால் பெரும்பாலும் பேருந்துகளைத்தான் நாட வேண்டியதாக இருக்கிறது. தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில்கள் வெகு சொற்பம். பயண நேரமும் அதிகம்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பயணிகளை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே புதிய ரயில் சேவையை அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை அதாவது ஒரு வாரம் மட்டும் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையையும் சஷ்டி விழாவையும் கருத்தில் கொண்டு இந்த ரயில் சேவையை நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
முன்பதிவு செய்யப்படாத வண்டி (எண் – 06106) கோயம்புத்தூர் – திண்டுக்கல் மு எக்ஸ்பிரஸ் செல்லும் வழித்தடங்கள் இவை :-
கோயம்புத்தூரில் இருந்து…
கோயம்புத்தூர் 09.35 (காலை)
போத்தனூர் 09.48
கிணத்துக்கடவு 10.13
பொள்ளாச்சி 11.08
உடுமலைப்பேட்டை 11.33
பழனி 12.05
ஓட்டன்சத்திரம் 12.35
திண்டுக்கல் 13.10
அதேபோல் மறு மார்க்கமாக திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்
ரயில் எண் – 06107 கீழ்க்கண்டவாறு பயணிக்கும்.
திண்டுக்கல் 14.00 (பிற்பகல் 2 மணி)
ஓட்டன்ச்சத்திரம் 14.28
பழனி 15.00
உடுமலைப்பேட்டை 15.36
பொள்ளாச்சி 16.20
கிணத்துக்கடவு 16.44
போத்தனூர் 17.10
கோயம்புத்தூர் 17.50
சொகுசான பயணம், விரைவான பயணம், பாதுகாப்பான பயணம் மற்றும் பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும்பொழுது மூன்றில் ஒரு பங்கு கட்டணமே ஆகும், இந்த மேமு எக்ஸ்பிரஸின் சிறப்பு. அதனால் இந்த ரயில் சேவையை நிரந்தரமாக்க ரயில்வே பயணிகள் சங்கம் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(படம்: நன்றி: indiarailinfo.com)