ஐ.ஐ.எம்.மில் படிக்கத் தயாரா?

ஐ.ஐ.எம்.மில் படிக்கத் தயாரா?

மேலாண்மைப் படிப்புகளைப் படிப்போருக்குப் பெரும்பாலும் இருக்கக்கூடிய ஒரே இலக்கு என்றால் அது, ‘இந்திய மேலாண்மைக் கழகங்கள்’ எனும் ஐ.ஐ.எம்.கள் தாம்.

இதற்காக நடத்தப்படும் கேட் (CAT) தேர்வில் கடும் உழைப்பைச் செலுத்தி, உயர் மதிப்பெண்கள் பெற்றால் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைக்கும். அங்கு உயர் மதிப்பெண்களுடன் வெளியே வரும்போது, வளாக நேர்காணலிலேயே கணிசமான சம்பளத்துடன் வேலையும் கிடைக்கும்.

இவை தவிர, புகழ்பெற்ற தனியார் வணிக மேலாண்மைப் பள்ளிகளும் கேட் புள்ளிகளை (score) சேர்க்கைக்காகப் பயன்படுத்துகின்றன என்பதால் இந்தத் தேர்வுக்கு கண்ணுங்கருத்துமாகப் படிப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

அத்தகைய வாய்ப்புகளை வழங்கும் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முதற்படியான ‘கேட்’ தேர்வு கால அட்டவணை வந்திருக்கிறது. அதன்படி,

இத்தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 24, 2024

தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பை முடித்திருப்போர் கலந்துகொள்ளலாம்.

கட்டணம்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ.1250. மற்றவர்களுக்கு ரூ.2500.

இறுதி நாள்: செப்டம்பர் 13.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்ய:  நவம்பர் 5 – 24.

தேர்வு முடிவுகள் வெளியீடு:  2025 -ஜனவரி 2 ஆவது வாரம்.

கூடுதல் தகவல்களை www.iimcat.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.

தேர்வு எழுதும் அனைவருக்கும் முனைவின் வாழ்த்துகள்!

(Image by I Business Institute from Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *