”மன்னியுங்கள் ஊழியர்களே!”-பைஜூஸ் ரவீந்திரன்

”மன்னியுங்கள் ஊழியர்களே!”-பைஜூஸ் ரவீந்திரன்

நாட்டின் முன்னணி தனியார் தனிப்பயிற்சி (tuition) நிறுவனமான பைஜூஸ், நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் சிக்கி, நொடிப்பு நிலை அபாயத்தை எதிர்கொண்டு வருவது நாம் அறிந்ததே. அந்நிறுவனத்தின் நிறுவனரான ரவீந்திரன், தனது ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில், “இக்கடினமான சூழலில் எம்மோடு நீங்கள் இணைந்திருப்பதற்கு மிக்க நன்றி. எதையும் எதிர்பாராது நீங்கள் கற்றல் பணியைத் தொடர்கிறீர்கள். ஓர் ஆசிரியரின் தன்மையே அதுதான். இன்றைய கடினமான பொருளாதார சூழலில் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தை என்னால் தர முடியவில்லை. ஆனால், நிலைமை சரியானதும் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

உங்கள் உழைப்புக்கான அங்கீகாரமும் நிச்சயம் வழங்கப்படும். எனவே, தற்போது தரப்படும் குறைந்தளவு ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள்.  லட்சக்கணக்கான மாணவர்கள் நம்மை நம்பியிருக்கின்றனர். அதுவே நம்மை வெற்றிபெற வைக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

(படம்: நன்றி: பைஜூ ரவீந்திரன் விசிறிகள் முகநூல் பக்கம்)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *