நாட்டின் முன்னணி வீட்டுவசதி கடன் வழங்கு நிறுவனமான பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், பங்கு வெளியீட்டில் இறங்கியிருக்கிறது. ரூ.6.5 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி திரட்டுவதற்காக அந்நிறுவனம் 9 செப் 2024 அன்று அறிவிப்பை வெளியிட்டது.பங்கு ஒன்றின் விலை ரூ.66 முதல் ரூ.72 வரை இருக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.
மூன்றே நாட்களில் ஒதுக்கீடும் முடிவாகிவிடும் என்றும் தெரிவித்துவிட்டது. முதலீட்டாளர்கள் பலருக்கும் இந்த செய்தி சென்று சேருவதற்கு முன்பாகவே ஒரு அதிசயமே நடந்துவிட்டது. ஆம், ஆறாயிரம் கோடி நிதிதிரட்ட பங்குகளை வெளியிட்டால், ரூ.3 லட்சம் கோடியைக் கொட்டித்தரத் தயாராக இருப்பதாக (அதாவது 63 மடங்கு) முதலீட்டாளர்கள் சொல்லிவிட்டனர்.
ஆம். அந்த அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. அதாவது 4628 கோடி விண்ணப்பங்கள். எதிர்பார்த்ததோ 72.75 கோடி விண்ணப்பங்கள்தாம். இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இந்த அளவுக்கு ஒரு பங்கு வெளியீட்டுக்கு வரவேற்பு வந்திருப்பது இதுவே முதன்முறை.
இன்றைக்கு (செப்.12) யார் யாருக்கு எவ்வளவு பங்கு ஒதுக்கீடு என்ற விபரம் தெரியவரும்.
-அருண்மொழி.