ரூ.4521 கோடி நிகர லாபம் ஈட்டிய மஹிந்த்ரா நிறுவனம்

ரூ.4521 கோடி நிகர லாபம் ஈட்டிய மஹிந்த்ரா நிறுவனம்

மும்பை, நவ.8: புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்த்ரா & மஹிந்த்ரா, தனது இரண்டாவது காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை (2025-26) வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4521 கோடிகள் ஆகும். முந்தைய ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடும்போது இது 18% வளர்ச்சியாகும்.

கடந்த காலாண்டில் அந்நிறுவனம் ரூ.35,080 கோடி செயல்பாட்டு வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 21% அதிகம் ஆகும்.

ஒட்டுமொத்த வருவாய் என்று பார்க்கும்போது அக்குழுமம் ரூ.46,106 கோடி வருவாயை (இது 22% வளர்ச்சி) ஈட்டியிருக்கிறது.  ஒட்டுமொத்த வரிக்குப்பிந்தைய லாபம் ரூ.3673 கோடி ஆகும். வாகன உற்பத்தி, வணிக வாகன உற்பத்தி, டிராக்டர் தயாரிப்பு, மின் வாகன தயாரிப்பு ஆகியவற்றிலும் இந்நிறுவனம் நாட்டிலேயே முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறது.

-ம.விஜயலட்சுமி

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

No Content Available

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *