சென்னையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவு மாநாடு

முதல்வர் படைப்பகம்: தொழில் முனைவோருக்காக தமிழக அரசின் சூப்பர் திட்டம்

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார நீதி கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டின் பின் தங்கிய நிலையில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்த தொழில் முனைவோருக்காக “TN – BEAT EXPO 2025” சென்னை வணிக வளாகத்தில் ஜனவரி 25 & 26 தேதிகளில் நடைபெற உள்ளது.

“TN BEAT EXPO 2025- ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோரை உருவாக்குதல்” என்ற நோக்கத்துடன், பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (SC/ST) தொழில்முனைவோரை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி தொழில் முனைவோருக்கான தென்னிந்தியாவின் மிகப்பெரிய வணிக மாநாடு மற்றும் கண்காட்சி சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறுகிறது

மாநில அரசு மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளம் தொழில் முனைவோரின் கனவுகளை நனவாக்கவும் வியாபாரம் செய்வது எப்படி என்ற தகவல்களை தெரிந்து கொள்ளவும் இக்கண்காட்சி அமையும்.

35% அரசு மானியமுடன் வங்கிகடன் வழங்க தாட்கோ திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள சிறந்தொரு வாய்ப்பாக இருக்கும். வணிக நிபுணர்களின் ஆலோசனைகளின் படி தொழில் முனைவோர் தங்களின் வியாபாரத்தை, தயாரிப்புகளை மற்றும் பிராண்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கு இது நல்லதொரு வாய்ப்பு.  ஒரே கூரையின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்திக்கவும் விளம்பரபடுத்தவும் வசதிகள் உள்ளன.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *