இராணுவத் தளவாடத் தொழில் துறையின் கேந்திரமாக உருவெடுக்கும் கோவை.

இராணுவத் தளவாடத் தொழில் துறையின் கேந்திரமாக உருவெடுக்கும் கோவை.

அண்மைக்காலமாக சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்கள் தமிழ்நாடு பாதுகாப்புத்துறை வழித்தட மேம்பாட்டில் பங்கு வகிக்க இருக்கின்றன என்ற செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவின் உற்பத்தி தலைநகரமான சென்னை, இதில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதேவேளையில் இரண்டாம் நிலை நகரமான கோவையும் தற்போது முக்கியப் பேசுபொருள் ஆகியிருக்கிறது.

அவ்வகையில் கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் (CODISSIA Defence innovation and Atal Incubation Center – Defence Innovation Hub , CDIIC-DIH) முக்கியமான முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது.அவ்வமைப்பு கடந்த டிச.27 அன்று  இராணுவம் சார்ந்த தொழில்களுக்கான கூட்டம்  ஒன்றினை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  இராணுவத் தொழில் புத்தாக்க மையத்தின் (CDIIC) ஆய்வு மற்றும் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும், கள்ளப்பாளையத்தில் உள்ள கொடிசியா தொழிற்பூங்காவில் தனி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இராணுவத் தளவாட தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்(MSME), இராணுவ புத்தாக்க நிறுவனம்(DIO), இராணுவம் மற்றும் இராணுவம் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் (DPSUs) பிரதிநிதிகள் மற்றும் ஆயுதப்படைகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கொடிசியாவின் தலைவரும், CDIIC இயக்குநருமான திரு. M. கார்த்திகேயன் வரவேற்புரையாற்றி, சி. டி. ஐ. ஐ. சி -யின் உருவாக்கம் குறித்த விவரங்கள் மற்றும் இந்த மையத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்ற முக்கியமான செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார். சி. டி. ஐ. ஐ. சி-ன் இயக்குநர் திரு. V. சுந்தரம் இராணுவ புத்தாக்க தொழில் முயற்சிகளில், சி. டி. ஐ. ஐ. சி-ன் குறிப்பிடத் தகுந்த சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டோர் (படம்: கொடிசியா)

விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அரசின் இராணுவத் துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் IAS அவர்களின் கூற்றுப்படி, உள்நாட்டு இராணுவ தளவாட உற்பத்தி முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான தேவை உள்ளது. இந்த முயற்சியில் இராணுவ புத்தாக்க மையங்களில் பங்கு மிக முக்கியமானது என்றும் கூறினார். மேலும் உள்நாட்டு தளவாட உற்பத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிப்பது போன்ற பணிகளை செய்வதன் மூலம் இந்திய நாடு ஒரு சுய சார்புடைய நாடாக மாற்றுவதற்கு பணியாற்றி வரும் கொடிசியாவின் முயற்சிகளையும் பாராட்டினார்.

இராணுவத் தொழில் துறைச் சார்ந்து சாதனைகள் புரிந்த இளம் புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாராட்டு பெற்றன. தமிழ்நாட்டை, குறிப்பாக கோவையை முன்னணி இராணுவத் தளவாட உற்பத்தி மையமாக நிலைநிறுத்த , சி. டி. ஐ. ஐ. சி-டி. ஐ. ஹெச் -ன் முயற்சிகளை வலுப்படுத்தவும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன. மத்திய அரசின் மேக்இன் இந்தியா திட்டத்தின் படி, இராணுவ அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சி. டி. ஐ. ஐ. சி ஸ்டார்ட் அப் மற்றும் கொடிசியா உறுப்பினராக உள்ள தொழிற்சாலைகளின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரித்த இறக்குமதி மாற்று கூறுகளையும்  காட்சிப்படுத்தினர். கொடிசியா கெளரவ செயலாளரும், CDIIC- இயக்குநருமான திரு. M. யுவராஜ் கூட்டத்தில் பங்கு பெற்றோருக்கு நன்றி கூறினார். 

இதை தொடர்ந்து ஜனவரி 20 & 21 தேதிகளில் கோவையில் மற்றும் ஜனவரி 23 & 24 தேதிகளில் சென்னையில் இராணுவம் சார்ந்த உற்பத்திகளை தயாரிக்கும் ஸ்டார்ட்அப்களுக்கு பிரத்யேக முதலீட்டு தயாரிப்பு   தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. 

இவற்றில் பங்குபெற விரும்புவோர் https://lnkd.in/gQrpGVx2 -ல் இப்போதே விண்ணப்பிக்கலாம். 

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

(Featured Image by freepik)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *