பிடிச்சப்ப வேலை செய்றது சரியா?

பிடிச்சப்ப வேலை செய்றது சரியா?

வணக்கமுங்க…

நாந்தான் அலோசனை அறிவழகன். பார்த்து ரொம்ப நாளாச்சுங்க. கொஞ்சம் கோவத்துல இருப்பீங்கன்னு தெரியும். மன்னிச்சுக்கோங்க. வேற வழி இல்லீங். கொஞ்சம் வேலையாயிப்போச்சுங்க. அதுனாலதான் இந்தப்பக்கம் நான் தட்டுப்படவே இல்லீங். தப்பா நினைக்க வேண்டாமுங்க.

அதொருபக்கம் இருக்கட்டுமுங்க…முக்கியமான ஒரு விஷயத்தை உங்க காதுல போட்ரோணும்னுதான் ஓடி வந்தனுங்.

என்னன்னு கேக்கறீங்களா? முக்கியமான விஷந்தேனுங்…

நம்ம பழனிச்சாமி அண்ணனோட பையன் சக்தி தெரியுமல்லோ… நல்ல பையனுங்…வெளியூர்ல போயி என்னன்னவோ படிச்சுட்டு வந்தாப்டி. அப்புறமா இங்க நம்மூருக்கே வந்துட்டாப்டி. ஒருங்கிணைந்த பண்ணையம் பண்ணோனும்னு ஒரே புடிவாதம். அவிக அப்பாரய்யன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாருங்க….ஆனா, எள ரத்தம் பாருங்க… ஆரு சொல்றதையும் கேக்கற கூறே தெரீலிங்.

சக்தி, விவசாய ஆபீசருக அவிங்க இவிங்கன்னு நிறைய பேர கூட்டிட்டு வந்து ரோசனை கேட்டாப்பிடி. நல்லா உழைச்சாப்பிடி. அதெல்லாம் தப்பே சொல்ல முடியாதுங்.

ஆனா, ஒரே ஒரு சின்ன தப்புதானுங்க. அவரோட தொழிலையே மொடக்கிப் போட்டுடுதுங்க.

என்ன தெரியுங்களா… அவருக்கு ஒரு பழக்கம் இருக்குதுங்…அவருக்கு எப்போ வேலை செய்யணும்னு தோணுதோ, அப்பத்தான் வேலை செய்வாருங்க. அதாவது, அவருக்கு வேலை செய்ற மூடு வரோணும். வந்துச்சுன்னா ஆளைப் பிடிக்கவே முடியாதுங்க….தீ மாதிரி வேலை செய்வாருங்க. ஆனா, மூடு இல்லைன்னு வையுங்க, கயித்தக் கட்டி இழுத்தாலும் ஆளு நகரவே மாட்டாருங்க.

இதுனால என்ன ஆச்சுன்னா, செய்ய வேண்டிய பல வேலைகளை தாமதாமா செஞ்சாருங்க. சிலதை செய்யவே முடியலீங்…அதுனால வருமானம் பாதிகப்பட்டுடுச்சுங்க. வேலை தெரியாத ஆளோ, விவரம் இல்லாத ஆளோ இருந்தா நாம இதையப் பத்திப் பேசப்போறதில்லீங்க. நம்ம சொந்தக்காரப் பையன். அவிங்க அப்பா பழனிச்சாமி யதார்த்தமான டைப்…அப்புறம் அதையப் பேசித்தான் ஆக வேண்டியிருக்கு…

சக்தியோட தள்ளிப்போடற பழக்கம், சோம்பேறித்தனம்னு பலதும் ஒண்ணா சேர்ந்து அவரோட தொழிலை மொடக்கிப் போட்டுடுச்சுங்க..இப்போ கடன்காரர் ஆகிப்போயிட்டாருங்க.

ஆரா இருந்தாலும் நாஞ்சொல்றது இதுதாஞுங்க…எந்தத் தொழிலையும் செய்யுங்க….அதுனால தப்பு இல்ல. ஆனா, அதைப் பொழுதுபோக்காட்டம் செய்யாதீங்க. அதோட விருப்பத்துக்கு ஏத்தமாதிரி வேலை செய்யுங்க. உங்க விருப்பத்துக்கு செஞ்சா அது தொழிலுக்கு அழகு இல்லீங்…

என்னங் நாஞ் சொல்றது?

(Image by ASphotofamily on Freepik)

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *