யூ டியூப் ஷார்ட்ஸ்-க்கு கூடுதல் நேரம். அடுத்து என்ன?

டிக்-டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 60 விநாடிகள் வரையிலான காணொளிகளுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. இதற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் தனது யூடியூபில், அக்டோபர் 15 முதல், படைப்பாளிகள் மூன்று நிமிட நீளம் கொண்ட காணொளிகளை (ஷார்ட்ஸ்) பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவித்தது. இதை தொடர்ந்து, ஷார்ட்ஸ் படைப்பாளிகள் இதனை வரவேற்றுள்ளனர்.  

படைப்பாளர்கள் அதிகம் கோரிய அம்சம்
கூகுள் நிறுவனம், படைப்பாளர்கள் அதிகம் கோரியதை கருத்தில் கொண்டு, இந்த சிறப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுப்பிப்பு மூலம், படைப்பாளிகள் தங்கள் கதைகள் அல்லது கருத்துகளை பார்வையாளர்களை நெகிழ வைக்கும் வகையில் உருவாக்கலாம். இதனை அடிக்கடி கூகிள் பேசிவருகிறது. 

வீடியோக்களின் வடிவமைப்பில் மாற்றங்கள்
இந்த மாற்றம் சதுரம் அல்லது உயரமான விகிதத்தில் இருக்கும் வீடியோக்களுக்குப் பொருந்தும். அக்டோபர் 15-க்கு முன் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் இந்த மாற்றங்கள் பொருந்தாது.  நீண்ட ஷார்ட்ஸ்களுக்கான பரிந்துரைகளை மேம்படுத்தும் பணியில் யூடியூப் செயல்படுவதாகவும் உறுதியளித்துள்ளது.

ஷார்ட்ஸ் பிளேயர் மேம்பாடு
யூடியூப் தனது ஷார்ட்ஸ் பிளேயரை புதிய, நேர்த்தியான தோற்றத்துடன் புதுப்பித்துள்ளது. இது, படைப்பாளர்களின் காணொளியின் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டு பார்வையாளர்களை ஈர்க்க உதவுகிறது.

டெம்ப்ளேட் மூலம் புதிய ஷார்ட்ஸ்
யூடியூப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த ஷார்ட்ஸ்களை புதிய டெம்ப்ளேட்களை பயன்படுத்தி மீண்டும் உருவாக்கலாம். இந்த டெம்ப்ளேட்கள் புதிய ஆடியோ மற்றும் தனித்துவமான சேவைகளைக் கொண்டு பயனர்களுக்கு சம காலப் போக்கை அனுசரிக்க உதவுகின்றன. “ரீமிக்ஸ்” பொத்தானை சொடுக்கி, “இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தவும்” தேர்ந்தெடுத்து, பயனர்கள் புதிய வடிவமைப்புகளை முயற்சிக்கலாம்.

ஷார்ட்ஸ் கேமராவின் மேம்பாடு
வரும் மாதங்களில், யூடியூப் உள்ளடக்கங்களிலிருந்து, பயனர்கள் தங்கள் பிடித்த வீடியோக்கள் மற்றும் மியூசிக் கிளிப்புகளை ஷார்ட்ஸ் கேமரா மூலம் ரீமிக்ஸ் செய்து, புதிய வடிவம் கொடுக்கலாம்.

வியோ மாடலின் அறிமுகம்
கூகுள் டீப் மைண்டின் வீடியோ உருவாக்கும் மாடலான வியோ, யூடியூப் ஷார்ட்ஸில் பயன்படுத்த வர இருக்கிறது. இதன் மூலம், படைப்பாளிகள் பல்வேறு பின்னணிகள் மற்றும் தனித்த வீடியோ கிளிப்புகளை உருவாக்கி, தங்கள் கருத்துக்களை உயிரூட்டலாம்.

பயனர்களுக்கான விருப்பங்கள்
யூடியூப் பயனர்கள் தங்கள் முகப்பு (Home Feed) தளத்தில் குறைவான ஷார்ட்ஸ்களை காண ஒரு புதிய விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். “சில ஷார்ட்ஸ்காண்பிக்க” (Show fewer Shorts) எனும் இந்த தேர்வை, முகப்பில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவில் சொடுக்கி செயல்படுத்தலாம்.

-ஸ்ரீஜாராதாகிருஷ்ணன்.

(Image by rawpixel.com on Freepik)

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

1 thought on “யூ டியூப் ஷார்ட்ஸ்-க்கு கூடுதல் நேரம். அடுத்து என்ன?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *