டாப்செட்கோ….சில துளிகள்

புதுசா தொழில் தொடங்கறீங்களா? அப்படீன்னா இந்த 10  விஷயங்களைப் பண்ணாதீங்க…

டாப்செட்கோ என்ற சொல்லை நீங்கள் முனைவில் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். பிற்டுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் என்பது அதன் விரிவாக்கம் (TABCEDCO – TAMILNADU BACKWARD CLASSES ECONOMIC DEVELOPMENT CORPORATION). அதிக விளம்பரம் ஏதுமின்றி பல்வேறு சாதனைகளை செய்துவரும் அரசு நிறுவனம் அது. 

தமிழ்நாடு அரசு நிறுவனமான இந்த கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக-பொருளாதார நிலையினை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னையில், 1956 நிறுவன சட்டத்தின் கீழ் 1982-ம்  ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. 

பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார மேம்பாட்டுக்காக  இக்கழகம் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது.  சில்லரை வணிகம்  மற்றும் சிறுதொழில்கள்,  விவசாயம் சார்ந்ததுணைத் தொழில்கள், போக்குவரத்து தொடர்பான  தொழில்கள், கைவினைஞர் மற்றும் மரபுவழிச் சார்ந்த தொழில்கள் மற்றும் இளம் தொழில் பட்டதாரிகள் சுய தொழில் துவங்க என்று பல்வேறு தொழில்களுக்கு இந்தக் கழகம் நிதி உதவி அளிக்கிறது.

இந்த நிதி உதவியைப் பெற பயனாளிகள் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். அவரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயனடைவோரின் வயது  18 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 60 வயதுக்குள்  இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். 

கடன் பெற விண்ணப்பப் படிவங்கள் கீழே காணும் அலுவலகங்களில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். 

  1.  சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம்.
  2. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள். 
  3. டாப்செட்கோவின் இணையதளம் www.tabcedco.tn.gov.in
  4. கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
  5. கூட்டுறவு கடன் சங்கங்கள் / வங்கிகள் . 

 

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்கள் பூர்த்தி செய்து கீழ்க்காணும் ஆவண நகல்கள்… 

 

  • சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் 
  • முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து விலைப்புள்ளி (கொள்முதல் இருந்தால்). 
  • திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்)
  • குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்)
  • ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்)
  • வங்கி கோரும் அடமானத்துக்குரிய ஆவணங்கள் 
  • ஆதார் அட்டை 

ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் / கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்/ கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.  இப்படிப் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை மத்திய கூட்டுறவு வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்/ நகர கூட்டுறவு வங்கிகள் முதலியவை பரிசீலிக்கும். 

கடன் தொகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் பயனாளியின் செயல்பாடு, நம்பகத்தன்மை மற்றும் கடனைத் திருப்பி செலுத்தும் திறன் குறித்து, இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக் குழு ( Screening Committee ) ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். கடன் தொகைக்கான பிணையம் வங்கி விதிகளின்படி இருக்கும் . 

கடன் திட்டங்களின் விவரங்கள்: 

  1. பொது காலக்கடன் திட்டம் : 

இத்திட்டத்தின் கீழ் சிறு தொழில்/வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ. 15 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. இதில் பயனாளியின் பங்கு 5%. முதல் ரூ.5 லட்சம் வரை வட்டி விகிதம் 6% அதற்கு மேலானால் 7% வட்டி வசூலிக்கப்படுகிறது. மூன்றுலிருந்து எட்டு வருடங்களுக்குள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும்.

        பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள் : 

  • பெண்களுக்கான நுண் கடன் திட்டம் (Micro Finance Scheme) –

           (மகிளா சம்ரிதி யோஜனா)

இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ சிறுதொழில் / வணிகம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுய உதவிக் குழு துவங்கி குறைந்த பட்சம் 6 மாதங்களாவது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இத்திட்டத்தின் அலுவலரால்  இந்த குழுவின் பணி தரநிலை (Grading)செய்யப்பட்டிருக்க வேண்டும்ரூ. அதிகபட்சம் ஒரு நபருக்கு ரூ. 1 லட்சமும், ஒரு குழுவிற்கு     ரூ.15 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த தொகைக்கான வட்டி விகிதம் 4% தான். 4 வருடங்களுக்குள் கடன் தொகையை திரும்ப அடைத்திட வேண்டும்.   

பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டம்: 

பெண்களின் முன்னேற்றத்தினை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு வணிகம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்ச கடன் தொகையாக ரூ.2 லட்சம் கொடுக்கப்படுகிறது. 5% இதற்கான வட்டி விகிதம்.3-8 ஆண்டுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்தி விட வேண்டும், 

ஆண்களுக்கான சிறு கடன் திட்டம் : 

இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆண்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ. 1 லட்சம் கடன் தொகை வழங்கப்படும். அதுவே ஒரு குழுவாக செயல்படுவதாக இருந்தால் அதிகபட்சம் ரூ.15 லட்சம் கடன் தொகையாக பெறலாம். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த தொகைக்கான வட்டி விகிதம் 5 விழுக்காடு. 4 வருடங்களுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.

கறவை மாட்டுக் கடன் : 

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30000/- வீதம் அதிகபட்சம் 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு ரூ.60000/- கடன் வழங்கப்படுகிறது. இந்ந கடன் தொகைக்கான வட்டி விகிதம் 6 விழுக்காடு. 3 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த கால அவகாசமுள்ளது.சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துவதற்கான மானியம் வழங்கப்படும் : 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி வழங்குவதற்காக கூட்டுறவு வங்கிகள் / தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையான அதிகபட்சம் தலா ரூ.50000/- அளவிலான 50 விழுக்காடு அரசு மானியம் வழங்கப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த கழகத்தின் இணையதளத்தை ( www.tabcedco.tn.gov.inழ்0 பார்க்கவும்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *