”ஜி.எஸ்.டி.வரிக்குறைப்பு வேண்டும்”- கொடிசியா தலைவர் கார்த்திகேயன். 

”ஜி.எஸ்.டி.வரிக்குறைப்பு வேண்டும்”- கொடிசியா தலைவர் கார்த்திகேயன். 

சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையின் தற்போதைய தேவை என்ன? ஒன்றிய நிதிநிலை அறிக்கை அவர்களுக்கு சாதகமா?

இக்கேள்விகளுடன் கோவை மாவட்ட சிறு தொழில் சங்க கூட்டமைப்பான  கொடிசியாவின்  தலைவர் திரு எம். கார்த்திகேயன் அவர்களுடன் முனைவு நேர்காணலை நடத்தியது. அதிலிருந்து…

 முனைவு: கொடிசியாவின் உறுப்பு சங்கங்கள் எத்தனை?

கார்த்திகேயன்: தற்போது கொடிசியாவின் உறுப்பு சங்கங்கள் 42. அவற்றில் 2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஒன்றாகக் கூடிப் பேசி ஆராய்ந்து தீர்வு காண்கிறோம். Chamber Of Commerce, Southern India Manufacturers, IIF Coimbatore Chapter, Lamborghini Bhatia All India Chapter, Cotma போன்ற சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசிடம் தேவைகளை எடுத்துரைக்கின்றன.

 

முனைவு: இந்த ஆண்டின் பட்ஜெட் நீங்கள் எதிர்பார்த்தது போல இருந்ததா?

கார்த்திகேயன்:  ஆம்.  நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமனுக்கு ஜூலை 1 தேதியன்றே  சில கோரிக்கைகளை  சமர்ப்பித்திருந்தோம். எம் எஸ் எம் இ செயலாளர் கோவையில் பேச்சுவார்த்தை நடத்தியபோது வங்கித்துறையிலிருந்து கிடைக்கும் உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டோம்.

இந்தியா முழுவதுமாக 14% சிறு குறு தொழில் நிறுவனங்கள் மட்டுமே வங்கி கடனுதவித் திட்டங்களால்  பயனடைகின்றன என்பதை நிதியமைச்சரிடம்  தெரிவித்தோம். இதற்கான ஏற்பாடுகள்  அக்டோபருக்குள் செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Image by Miguel Á. Padriñán from Pixabay

பொதுத்துறை வங்கிகள் வழியாக தாராளமாகக் கடன்கள் வழங்கப்படும், பழைய மாதிரி சொத்துக்களைப் பிணையமாகக் காட்டினால்தான் கடனுதவி என்பது மாற்றபப்டும் என்று உறுதியளித்திருக்கிறார்.  அதேபோல புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்கள் விஷயத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகைகள்  சிறு – குறு – நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

 

முனைவு: கொடிசியாவின் உறுப்பு  சங்கங்கள் இந்த நிதிநிலையறிக்கையை எப்படிப் பார்க்கின்றன?

கார்த்திகேயன்: எல்லோருமே இந்த நிதியாண்டின் பட்ஜெட்டை நல்ல விதமாகவே கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பட்ஜெட் அறிக்கை வெளிவந்ததும் நாங்கள் ஆராய்ந்து, நன்மை பயக்கும்படி இருப்பதால் முதலிலேயே வரவேற்பு தெரிவித்தோம். கோவையைப் பொறுத்தவரை ஏமாற்றமில்லை.

முனைவு: சிறு குறு தொழில்களுக்கு GST என்பது ஒரு  நெருக்கடியா? இந்த பட்ஜெட்டில் அதற்கான தீர்வு கிடைத்ததா?

கார்த்திகேயன்: நிச்சயமாக GST சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு நெருக்கடிதான். நாங்கள் ஜாப் ஆர்டர்களுக்கான 5%  ஜி.எஸ்.டி ஆகக் குறைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை இந்த பட்ஜெட்டில் 18%இல் இருந்து 12% ஆகக் குறைத்து இருந்தார்கள். GST வரியை 5% ஆகக் குறைக்கக் கேட்டிருந்தோம், ஆனால் அதில் எந்தவித மாற்றமும் கொண்டுவரவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. CGSTயை விட SGST தான் பெரும் சவாலாக உள்ளது.

முனைவு: நமது பொருளாதாரத்தில் சிறு -குறு- நடுத்தர தொழில்களின் முக்கியத்துவம் என்ன?

கார்த்திகேயன்: இந்தியாவில் வேளாண்மைக்கு  அரசு, பொதுத்துறை வங்கிகளின் ஆதரவு நன்றாகவே உள்ளது. அதேபோல, எம் எஸ் எம் இ -க்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் சேவை துறையில் உள்ளன. அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற பொதுத்துறை வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட வேண்டும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 39% சிறு குறு நிறுவனங்கள்தாம் பங்களிக்கின்றன. அதேபோல, ஏற்றுமதியிலும்  45% பங்களிப்பு உள்ளது. அதனால், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அரசின் கூடுதல் கவனம் தேவை.

முனைவு: பொதுத்துறை வங்கிகளில் இருந்து தொழில் கடன் பெறுவோரின் எண்ணிக்கை  14% தான் உள்ளது.  இது ஏன்?

கார்த்திகேயன்: வங்கிகள் பிணையத்தின் அடிப்படையில் சிறு,  குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குகின்றன. பெரிய நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் தருவதற்கு உங்களிடம்  ஒதுக்கீடு உள்ளது என்றால்,  அதை வைத்து 2 பெரிய நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்கலாம்.

ஆனால், குறு தொழில் நிறுவனங்களுக்கு 25 லட்சம், 50 லட்சம், 1 கோடி, 2 கோடி என 200 – 300 சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்க முடியும் அல்லவா…

அதேபோல, வராக்கடன் விதிமுறைகளிலும் மாற்றம் செய்ய வேண்டும்.  திட்டத்தின் கீழ் 3.68 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எனவே, 6%  அளவுக்கு வராக்க்டன்  உள்ளது. CGMSE திட்டத்துக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும். கடன் உத்தரவாதம் கிடைக்கின்றபோது, வராக்கடன் வீதம்  2.84% ஆக மட்டுமே உள்ளது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *